iPhone பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி... iPhone 12 சீரிஸ் வெளியீடு தேதி அறிவிப்பு..!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது..!

Last Updated : Oct 7, 2020, 01:34 PM IST
iPhone பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி... iPhone 12 சீரிஸ் வெளியீடு தேதி அறிவிப்பு..! title=

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது..!

அக்டோபர் 13 ஆம் தேதி டிஜிட்டல் நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனத்தின் (Apple iPhone) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பான ஐபோன் 12 சீரிஸ்-யை (iPhone 12 series) அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த தகவலை 5G ஐபோன்களின் வதந்திகள் உண்மையானவை என்று பரிந்துரைக்கும் “ஹாய், ஸ்பீடு” என்று பத்திரிகை அழைப்பு கூறுகிறது. இந்த நிகழ்வில் புதிய iPhone 12 மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதுடன், பல்வேறு அக்சஸரீக்களும் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. 

இதுவரை வெளியான தகவல்களின் படி, ஆப்பிள் நான்கு iPhone-களை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. எனினும், இம்முறை மூன்று iPhone-கள் அறிமுகமாகும் என தெரிகிறது. இவை அனைத்திலும் OLED டிஸ்ப்ளே மற்றும் 5G வசதி வழங்கப்பட இருக்கின்றன. இந்த மூன்று மாடல்களும் 6.1-inch, 6.7-inch மற்றும் 5.4-inch டிஸ்ப்ளேகளை கொண்டிருக்கும். இதன் ப்ரோ மாடல்களில் LIDAR சென்சார் வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. புதிய iPhone-களில் ஆப்பிள் A14 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ALSO READ | இனி ஷாப்பிங் செய்ய பணம் கொண்டு போகவேண்டாம்... இந்த ஒரு App போது..!

இது தவிர புதிய ஐபோன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன்கள் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ, ஹை எண்ட் ஒவர்-இயர் ஹெட்போன், ஏர்டேக்ஸ், சிறு டிராக்கிங் சாதனம், சிறிய ஹோம்பாட் மற்றும் புதிய மேக் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News