Post Office வாடிக்கையாளர்களுக்கு good news: விரைவில் வரவுள்ளன அதிக வசதிகள்

சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதைத் தவிர, வீட்டிலேயே சென்று மக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் தபால் துறை கவனம் செலுத்தும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2021, 01:11 PM IST
  • தபால் அலுவலக வாடிக்கையாளர்கள் ஏப்ரல் முதல் சிறந்த சேவையைப் பெறுவார்கள்.
  • அஞ்சல் துறை சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிப்பு.
  • குறைந்தபட்ச இருப்பு காரணமாக தபால் அலுவலகத்திற்கு ஆண்டுக்கு ரூ .2800 கோடி இழப்பு.
Post Office வாடிக்கையாளர்களுக்கு good news: விரைவில் வரவுள்ளன அதிக வசதிகள் title=

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் முதல் சிறந்த சேவையைப் பெறத் தொடங்குவார்கள். ஏனெனில் தபால் அலுவலக சேமிப்பு வங்கி (India Post Payments Bank) ஏப்ரல் மாதத்திற்குள் மற்ற வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்படும். மேலும், அனைத்து சேவைகளும் 2021 இல் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

லாக்டௌன் (Lockdown) வேளையில், ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து மூடப்பட்டிருந்த போது அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் அஞ்சல் துறை துரிதமாக செயல்பட்டதாக அஞ்சல் துறை செயலாளர் பிரதீப்த குமார் பிசோய் தெரிவித்தார்.

மேலும், தபால் துறை, தொடர்ந்து தன் திறனை அதிகரிப்பதில் செயல்பட்டு வருகிறது. ஏனெனில் இது வரை ரயில்கள் முன்பு இருந்ததைப் போல முழு அளவில் இயங்கத் தொடங்கவில்லை.

புதிய ஆண்டில், தபால் அலுவலக சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிப்பது மற்றும் மக்களின் வீடுகளுக்கே சென்று சேவைகளை வழங்குவது குறித்தும் நாங்கள் தீவிரமாக செயல்படுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“எங்கள் வங்கி மற்றும் நிதி சேவைகள் ஏற்கனவே டிஜிட்டல் (Digital) முறையில் உள்ளன. தபால் அலுவலக சேமிப்பு வங்கிகள் ஏப்ரல் மாதத்திற்குள் மற்ற வங்கிகளின் கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.” என்றார் அவர்.

Post Office core banking

அஞ்சல் அலுவலக (Post Office) மைய வங்கி தீர்வு (CBS) அமைப்பு உலகிலேயே மிகப்பெரியதாகும். 23,483 தபால் நிலையங்கள் ஏற்கனவே பிணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா போஸ்ட் நாடு முழுவதும் 1.56 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 50 கோடிக்கும் அதிகமான தபால் அலுவலக சேமிப்பு வங்கி (PoSB) வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.

ALSO READ: ஒரே ஒரு missed call மூலம் இனி LPG Gas Cylinder-ஐ புக் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்

85 லட்சம் பரிவர்த்தனைகள்

சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதைத் தவிர, வீட்டிலேயே சென்று மக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் என்று பிசோய் கூறினார். இந்த ஆண்டு 85 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ .900 கோடியை அனுப்பியுள்ளதாகவும் 3 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சரிபார்ப்பு அவர்களின் வீட்டில் செய்யப்பட்டது என்றும் பிசோய் தெரிவித்தார்.

குறைந்தபட்ச இருப்பு 500 ரூபாய்

அஞ்சல் துறை (Postal Department) சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை ரூ .50 லிருந்து ரூ .500 ஆக உயர்த்தியுள்ளது. அதன் கேஜெட் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

13 கோடி கணக்குகளில் இருப்பு குறைவாக உள்ளது

தரவுகளின்படி, டிசம்பர் 19, 2019 நிலவரப்படி, 13 கோடி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு 500 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இது குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி, தபால் அலுவலக இயக்குநரகம் அனைத்து தபால் நிலையங்களுக்கும் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச இருப்பு காரணமாக தபால் அலுவலகத்திற்கு ஆண்டுக்கு ரூ .2800 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: UPI பரிவர்த்தனைகளில் அதிரடி மாற்றம், நீங்கள் கட்டணம் செலுத்த ரெடியா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News