விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டுடூள்...

விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டுடூலை வெளியிட்டுள்ளது!

Last Updated : Aug 12, 2019, 12:29 PM IST
விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டுடூள்...

விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டுடூலை வெளியிட்டுள்ளது!

விக்ரம் அம்பாலால் சாராபாய் கடந்த 1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் பிறந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர், தொழிலதிபராக வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் வாழ்ந்தவர். 

இதற்க்கு மாறாக, விக்ரமின் ஆர்வம் முழுவதும் இயற்பியலின் மீதே இருந்தது. இங்கிலாந்தில் இயற்பியல் ஆராய்ச்சியை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை கடந்த 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி நிறுவினார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணில் செலுத்த முதல் முக்கிய காரணமே விக்ரம்தான். எஸ்.ஐ.டி.இ எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முறை’ மூலம் 24,000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை வழங்க உதவினார். 

இன்று சர்வதேச அளவில் விஞ்ஞானிகளுக்கு போட்டியாக திகழும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கியவர் விக்ரம் சாராபாய். பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை பெற்ற இவர், கடந்த 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி உயிரிழந்தார்.

இவர் மரணமடைந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் 1972 ஆம் ஆண்டு, இந்திய தபால் துறை இவருடைய புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது. அந்த அஞ்சல் தலையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ரோகினி ஏவுகணையின் புகைப்படத்துடன் கூடிய சாராபாயின் படம் இடம் பெற்றிருந்தது. நிலவில் அமைந்திருக்கும் Sea of Serenity என்ற பெரும் குழி ஒன்றுக்கு விக்ரம் சாராபாய் அவர்களின் பெயர் வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன்  மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப்போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுளை வெளியிட்டுள்ளது.

 

More Stories

Trending News