மணப்பெண்ணை மணமகன் சகோதரி திருமணம் செய்யும் வினோத சடங்கு!

குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் வினோத சடங்கு அனைவரையும் ஈர்த்துள்ளது!!

Last Updated : May 26, 2019, 01:39 PM IST
மணப்பெண்ணை மணமகன் சகோதரி திருமணம் செய்யும் வினோத சடங்கு! title=

குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் வினோத சடங்கு அனைவரையும் ஈர்த்துள்ளது!!

"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் வினோத நடைமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன.  இந்த கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினரிடம் சில வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது.  இங்குள்ள ஆண் ஒருவர் திருமணம் செய்வதற்காக ஷெர்வானி உடை அணிந்து, தலையில் சபா அணிந்து, பாரம்பரிய வாள் ஏந்தி நின்றாலும் அவர் தனது திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத வழக்கம் உள்ளது. திருமணத்தின் போது மணமகன் தனது தாயாருடன் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

மணமகனுக்கு திலாக திருமணம் ஆகாத அவரது சகோதரி அல்லது அவரது குடும்பத்தில் உள்ள கன்னிப்பெண் ஒருவர் மணமகன் போன்று அனைத்து சடங்குகளையும் செய்து, மணமகளின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து அழைத்து வருவார். இந்த வழக்கத்தை பல காலங்களாக செய்துவருவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வழக்கங்களை  கடைப்பிடிக்காவிட்டால், துன்பங்கள் வந்து சேரும் எனவும் கூறுகின்றனர். 

இங்குள்ள 3 கிராமங்களின் ஆண் தெய்வங்கள் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரிகளாக உள்ளனர்.  அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் மணமகன்கள் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.  இதனால் தீங்கிலிருந்து அவர்களை தெய்வங்கள் காக்கும் என கிராமத்தினர் நம்புவதாகவும் கூறுகின்றனர். 

 

Trending News