சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் மே 29 ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கத்திரி வெயிலின் காலத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது.
இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குவதால், மக்கள் வெளியில் செல்லும் போது எச்சரிக்கையாகவும், உஷாராகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுமார் 26 நாட்கள் இருக்கும் அக்னி நட்சத்திரம் காலத்தில் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். மதியம் நேரம் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.