SeePic: விடிய விடிய ரெடி பன்னி எல்லாம் பாழாப்போச்சே!

ஐரோப்பா நாட்டை சேர்ந்த Ryan Smith என்பவர் தனது காதலிக்காக தயாரித்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் மற்றொரு பெண்னின் பெயர் இடம்பெற்றிருந்த சம்பவம், அவரது காதலுக்கே பாதகமாய் அமைந்துள்ளது!

Last Updated : Oct 1, 2018, 05:04 PM IST
SeePic: விடிய விடிய ரெடி பன்னி எல்லாம் பாழாப்போச்சே! title=

ஐரோப்பா நாட்டை சேர்ந்த Ryan Smith என்பவர் தனது காதலிக்காக தயாரித்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் மற்றொரு பெண்னின் பெயர் இடம்பெற்றிருந்த சம்பவம், அவரது காதலுக்கே பாதகமாய் அமைந்துள்ளது!

Ryan Smith மற்றும் அவரது காதலி Laura McKay கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். வருடம்தோறும் தனது காதலிக்கு தாமதமாகவே பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் Ryan Smith இந்த ஆண்டு சரியான நேரத்திலும், அதே வேலையில் வித்தியாசமான முறையிலும் காதலை தெரிவிக்க விரும்பினார்.

எனவே தான் காதலியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து அதனை ஒரு புகைப்பட தொகுப்பாக தயாரித்துள்ளார்.

சரியாக Laura-வின் பிறந்த நாள் அன்று அந்த வாழ்த்து அட்டையினை Laura-விடம் காண்பித்து இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பினார். ஆனால் முடிவு அவருக்கு பாதகமாய் அமைந்தது... Ryan Smith பார்த்து பார்த்து வடிவமைத்த வாழ்த்து அட்டையில் அவரது காதலி Laura-ன் பெயருக்கு பதிலாக Georgia என்னும் பெயர் இடம்பெற்று இருந்தது. இதை பார்க்காமல் தன் காதலியிடம் கொடுக்க இந்த விவகாரம் பூதாகரமாய் வெடித்துள்ளது.

பின்னர் தான் தெரியவந்துள்ளது... Ryan Smith தனது காதலிக்கு வடிவமைத்த வாழ்த்து அட்டை Online வடிவமைப்பில் உறுவாக்கப்பட்டது என,. புகைப்படங்களை மாற்றிய Ryan Smith பெயரினை மாற்ற மறந்துவிட்டார். இது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். Ryan Smith தவறால் உறுவான வாழ்த்து அட்டையினையும், அவரது வாழ்த்து செய்தியினையும் Laura தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

Trending News