சிம்லா: இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் இன்று இப்பருவத்தில் முதல் பனிப்பொழிவு நிகழ்ந்தது!
பனிப்பொழிவை ரசிக்கும் வகையில் ரிட்ஜ் மற்றும் மால் சாலையில் சுற்றுலா பயணிகள் கூடி பனிப்பொழிவினை அனுபவித்தனர். தீடீரென பொழிந்த பனிப்பொழிவால் மரங்களின் இலைகள், ரிட்ஜ், மால் ரோடு, ஜாகு ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் கூரை வெண்மை நிறத்தில் பனிப்பொழிவுடன் காட்சியளித்து சுற்றுலா பயணிகளை உற்சாகமூட்டியது.
சிம்லா இதுவரை 3.8 செ.மீ. பனிப்பொழிவு பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவு தற்போதும் தொடர்ந்து பொழிந்து வருகின்றது. சிம்லாவிற்கு அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவை அனுபவிப்பதற்கு விரைவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கிறது.
சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலாத்தளமான குப்ரியிலும் 7 செ.மீ. பனிப்பொழிவு பொழிந்துள்ளது என சிம்லா மெட்ரோ மைய இயக்குனர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
சம்பா மாவட்டத்தின் டல்ஹெளசி பகுதியில் ஏறத்தாழ 1.5 செ.மீ. பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லால்பூர் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பழங்குடி கின்னார், கீலாங் பகுதியில் 6 செ.மீ. மற்றும் 3 செ.மீ. பனிப்பொழிவு பெற்றன. இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு தற்போது துவங்கியுள்ள நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகையும் துவங்கியுள்ளது.