நம் ஆதார் கார்ட் மூலம் இதுவரை வாங்கிய சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி?

தொலைத்தொடர்புத் துறையானது TAF-COP மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் என்ற போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 19, 2022, 09:40 AM IST
  • ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது.
  • சிம் கார்ட் வாங்குவதற்கு ஆதார் கட்டாயம்.
  • நம் ஆதாரில் எத்தனை சிம் வாங்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்கலாம்.
நம் ஆதார் கார்ட் மூலம் இதுவரை வாங்கிய சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி? title=

வங்கியில் கணக்கு தொடங்குவதாக இருந்தாலும் சரி, பள்ளி சேர்க்கைக்காக இருந்தாலும் சரி எந்தவொரு அதிகாரபூர்வ செயலுக்கும் ஆதார் அட்டை என்பது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.  இந்திய குடிமகன்களின் முக்கியமான இந்த அடையாள அட்டையில் 12 இலக்க ரகசிய எண்கள், கைரேகை, கருவிழி ரேகை, புகைப்படம் உள்ளிட்ட பல பயோமெட்ரிக் தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும் கொண்டுள்ளது.  மேலும் ஆதார் அட்டையை வங்கி கணக்குகள், வாக்காளர் அடையாள அட்டை, காப்பீடு அட்டைகள் மற்றும் மொபைல் எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.  சிம் கார்டுகள் வாங்குவதற்கும் இப்போதெல்லாம் ஆதார் அட்டை தான் அடையாள சான்றாக பயன்படுகிறது.  சிலர் மோசடி செய்து நமது ஆதார் எண்ணை வைத்து சிம் கார்டு வாங்கி ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது, இனிமேல் இதுபற்றி கவலைப்பட தேவையில்லை.  தங்கள் ஆதார் அட்டையை வைத்து எத்தனை சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது என கண்டறியும் வசதியினை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு லாட்டரி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்

தொலைத்தொடர்புத் துறையானது TAF-COP மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் என்ற போர்ட்டலைத் தொடங்கியுள்ளது, அதில் உங்கள் பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் கண்டறியலாம்.  இந்த நடவடிக்கைகள் டெலிகாம் சேவை வழங்குநர்களால் தொலைத்தொடர்பு வளங்களை சரியான முறையில் ஒதுக்கீடு செய்வதை உறுதிசெய்யவும், இதன்மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.  அரசின் இந்த வசதி தற்போது ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.  அரசின் வழிகாட்டுதலின்படி ஒரு நபரின் பெயரில் 9 மொபைல் நம்பர்களை பெறலாம்.

1) சரிபார்க்க tafcop.dgtelecom.gov.in என்கிற இணைய பக்கத்திற்கு செல்லவும். 

2) உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு 'Request OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

3) உங்கள் திரையில் ஓடிபி பேனல் கேட்கும்.

4) அதன் பிறகு பாஸ்வேர்டை உள்ளிட்டு 'சரிபார்' என்பதைக் கிளிக் செய்யவும்.

5) இப்போது உங்கள் ஆதார் எண்ணை வைத்து எத்தனை சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை காணலாம்.

மேலே உள்ள படிநிலைகளை பின்பற்றி நீங்கள் வாங்காத மொபைல் எண்கள் எதுவும் அதில் இருந்தால் அந்த எண்ணைத் தேர்ந்தெடுக்கவும், அதன் பிறகு மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, 'ரிப்போர்ட்' என்பதைக் கிளிக் செய்யவும்.  பின்னர் எதை நீக்க விரும்புகிறீர்களோ அதை எண்ணை தேர்வு செய்யவும்.

மேலும் படிக்க | கீபேட் மொபைலில் இருந்து இனி மின்சார கட்டணம் செலுத்துவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News