இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் 70க்கும் மேற்பட்ட மின் வாரியங்களுக்கு 123PAY மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை மக்களுக்கு இப்போது வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 123PAY மற்றும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் மின் கட்டணங்களை விரைவாகவும் எளிதாகவும் செலுத்த முடியும். மக்கள் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது. 123PAY யூபிஐ சேவையானது ஃபீச்சர் போன்களுக்கென்று பிரத்யேகமாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (என்பிசிஐ) வடிவமைக்கப்பட்டது, இது இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. 123PAY ஆனது ஃபீச்சர் ஃபோன்களின் பயனர்களுக்கு டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனையை மேற்கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. என்பிசிஐ செய்திக்குறிப்பின்படி, 123PAY-ஐ பயன்படுத்தி உங்கள் மின்கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், ஜனவரியில் மாபெரும் டிஏ ஹைக்
1) வாடிக்கையாளர்கள் 123PAY பேமெண்ட் அழைப்பு எண்களான 080-4516-3666 அல்லது 6366 200 200 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும்.
2) புதிய பயனர்கள் ஆன்போர்ட்டட் செய்யப்படுவார்கள்.
3) மின் கட்டணம் செலுத்தும் விரும்பும் ஆப்ஷனை பயனர் தேர்வு செய்ய வேண்டும்.
4) அதன் பின்னர், பணம் செலுத்த வேண்டிய மின்சார வாரியத்தின் பெயரைப் கூறவேண்டும்.
5) பின்னர் அழைப்பில் கேட்கப்படும் விவரங்களை பயனர்கள் தெரிவிக்க வேண்டும்.
6) பின்னர் நிலுவையில் உள்ள பில் தொகை பற்றி பயனருக்கு தெரிவிக்கப்படும்
7) பணம் செலுத்துவதற்கு யூபிஐ பின்னை உள்ளிட வேண்டும், பாரத் பில் பேமென்ட் சேவை மூலம் இயக்கப்படும் '080 4516 3666' அல்லது '6366 200 200' என்ற கட்டண எண்களை டயல் செய்வதன் மூலம் பயனர்கள் 10 மொழிகளில் மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.
மேலும் படிக்க | வீடு வாங்கலையோ வீடு! 5 பெட்ரூம் வீடு வாங்கினா டெஸ்லா கார் ஃப்ரீ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ