மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட் பெறுவது எப்படி?

train ticket discounts : ரயில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட் கொடுக்கிறது ஐஆர்சிடிசி. இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 27, 2024, 06:54 AM IST
  • மாணவர்களுக்கான ரயில் டிக்கெட் தள்ளுபடி
  • இந்தியா முழுவதும் குறைந்த விலையில் பயணிக்கலாம்
  • யார் யாருக்கு எவ்வளவு கட்டணம் விவரம் தெரிந்து கொள்ளுங்கள்
மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட் பெறுவது எப்படி? title=

ரயில் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் பயணிக்கும் சூழலில், மாணவர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு சிறப்பு கட்டணச் சலுகையும் வழங்குகிறது. சாதாரண பயணிகளுடன் ஒப்பிடும்போது பாதியளவு கட்டணம் அல்லது இலவசமாக மாணவர்கள் நீண்ட தூரம் பயணிக்க முடியும். பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்கள், குறிப்பாக பெண் மாணவர்களுக்கு ஐஆர்சிடிசி டிக்கெட்டில் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அதனால், மாணவர்கள் ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்டுகளை சிறப்பு தள்ளுபடியில் பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

ஐஆர்சிடிசி மாணவர்களுக்கான சிறப்பு தள்ளுபடி டிக்கெட் விவரம்

- மாணவர்கள் ரயிலில் இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் சீட் வகுப்பில் பயணிக்கும்போது, அதற்கான கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். மாதாந்திர சீசன் டிக்கெட் (எம்எஸ்டி) மற்றும் காலாண்டு சீசன் (கியூஎஸ்டி) டிக்கெட்டுகளுக்கு (பொது வகை) 50 சதவீத தள்ளுபடியும் உண்டு.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்வது எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்

- ST \ ST பிரிவின் கீழ் வீட்டிற்குச் செல்லும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் சீட் கட்டணத்தில் 75 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் (MST) மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகள் (QST) ஆகியவற்றில் 75 சதவீத தள்ளுபடியும் உள்ளது.

- பட்டப்படிப்பு வரை படிக்கும் பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட்டின் (எம்எஸ்டி) கீழ் இரண்டாம் வகுப்பில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

-கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இரண்டாம் வகுப்பில் கல்விச் சுற்றுலா அல்லது படிப்புச் சுற்றுலாவுக்கு 75 சதவீத சலுகை கிடைக்கும்.

-கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான (மருத்துவம், பொறியியல்) போட்டித் தேர்வில் கலந்துகொள்ள இரண்டாம் வகுப்பு கட்டணத்தில் 75 சதவீதம் தள்ளுபடி.

- சிவில் சர்வீசஸ் தேர்வு (UPSC) எழுதும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணத்தில் 50 சதவீத சலுகை கிடைக்கும்.

-இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், இந்திய அரசின் எந்தவொரு திட்டத்திலும் அல்லது படிப்புப் பணிக்காகவும் கலந்துகொள்ள இரண்டாம் வகுப்பு\ஸ்லீப்பரில் 50 சதவீத சலுகையைப் பெறலாம்.

- 35 வயது வரையிலான ஆராய்ச்சி அறிஞர்கள் ஆராய்ச்சிப் பணிக்காகப் பயணம் செய்யும் போது இரண்டாம் வகுப்பு/ ஸ்லீப்பரில் 50 சதவீத சலுகையைப் பெறுவார்கள்.

-படிப்பு தொடர்பான பணிகளுக்காக பயணிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பருக்கு 25 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இதுகுறித்து கூடுதல் தகவல் வேண்டும் என நினைப்பவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்கள் அல்லது இந்திய ரயில்வே துறையின் தகவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | PF ஜாக்பாட் செய்தி: விதிகளில் மாற்றம், இனி அதிக ஓய்வூதியம் கிடைக்கும்... அமைச்சர் அளித்த அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News