சுவையான ரோட்டு கடை காளான் செய்வது எப்படி? ஈசியான ரெசிபிதான்..

Road Side Kaalan Recipe Tamil : நம்மில் பலருக்கு ரோட்டுக்கடை காளான் என்றால் ரொம்ப பிடிக்கும். இதை ஈசியாக வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 17, 2024, 03:35 PM IST
  • ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி?
  • சிம்பிளான ரெசிபிதான்!
  • ட்ரை பண்ணி பாருங்க..
சுவையான ரோட்டு கடை காளான் செய்வது எப்படி? ஈசியான ரெசிபிதான்..

Road Side Kaalan Recipe Tamil : தமிழ்நாட்டையும், இங்கிருக்கும் ரோட்டுக்கடை உணவுகளையும் எப்பேற்பட்ட 5 ஸ்டார் ஹோட்டல் உணவுகள் வந்தாலும் அடித்துக்கொள்ள முடியாது. அதிலும், கடந்த சில ஆண்டுகளில் பலரையும் வெகுவாக கவர்ந்த ரோட்டுக்கடை உணவுகளுள் ஒன்று, காளான்தான். மாலை நேரத்தில் கடற்கரை ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் விற்கப்படும் இந்த உணவை, பலர் இரவு டின்னராகவே முடித்துக்கொள்கின்றனர். இந்த ரோட்டுக்கடை காளானை வீட்டில் கூட சிம்பிளாக செய்து முடிக்கலாம். அதற்கான ரெசிப்பியை இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

தேவையான பொருட்கள்:

  1. வெங்காயம்-2
  2. தக்காளி-2
  3. சிவப்பு மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
  5. கொத்தமல்லி தூள்-1 டீஸ்பூன்
  6. பீட்ஸா சாஸ் - 1 டீஸ்பூன் 
  7. கரம் மசாலா- 1 டீஸ்பூன்
  8. காளான் -அரை கப்
  9. உப்பு-தேவையான அளவு
  10. கார்ன் ஃப்ளேக்ஸ்-தேவையான அளவு
  11. சோள மாவு குழம்பு-தேவையான அளவு

மேலும் படிக்க | பேச்சிலர்கள் எளிதாக மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி? புரோட்டீன் அதிகம் இருக்கு பசங்களா!

எப்படி செய்ய வேண்டும்? 

  • முதலில் முட்டை கோஸை எடுத்து அதனை பொடிப்படியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • எந்த அளவிற்கு முட்டை கோஸை எடுத்துக்கொள்கிறீர்களோ, அதே அளவிற்க்கு காளானை எடுத்து பொடிப்பொடியாக நறுக்க வேண்டும்
  • இதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன், அரை கப் மைதா மாவு, அரை கப் கார்ன் ஃப்ளவர் மாவு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். 
  • தண்ணீர் அதிகமாக ஊற்றாமல், தேவைப்பட்ட அளவு தெளித்து இதனை எண்ணெயில் போட்டு பொரிக்கும் அளவிற்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 
  • கடாயில் எண்ணெய் ஊற்றி, மிக்ஸ் செய்து வைத்திருப்பதை சின்ன சின்ன பீஸாக பொறித்து எடுக்க வேண்டும். 
  • இன்னொரு கடாயில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வதக்கியதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி புண்டு விழுது சேர்த்து இரண்டும் மிக்ஸ் ஆகும் அளவிற்கு நன்றாக கிளர வேண்டும். 
  • இரண்டு தக்காளியை எடுத்துக்கொண்டு, அதனை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதில் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். 
  • இதில் தண்ணீர் கொஞ்சம், பீட்ஸா சாஸ் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம். 
  • இதை நன்றாக கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் ஏற்கனவே பொறித்து வைத்திருந்த காளானை அதில் சேர்த்து, மசித்து கொள்ள வேண்டும். 
  • இந்த காளானுடன் கார்ன் ஃப்ளேக்ஸை சேர்த்து சாப்பிட்டால், டேஸ்ட் அம்புட்டு ஜாேராக இருக்கும்.

காளானில் இருக்கும் நன்மைகள் என்னென்ன?

  • காளானில் கலோரிகள் குறைவாக இருக்கும். இதில் வைட்டமின் பி மற்றும் பந்தோடெண்டிக் ஆசிட் ஆகிய சத்துக்களும் இருக்கிறது. 
  • காளானில் பீடா க்ளூகன்ஸ் சத்து இருப்பதால், இது உடலில் நோயெதிர்ப்பு சக்தி வளர்வதை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 
  • இதய ஆரோக்கியம்: காளான், இதயத்திற்கு நல்லது என கூறப்படுகிறது. உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் காளான் உதவுகிறது. 

மேலும் படிக்க | வீட்டிலேயே பீட்ஸா செய்வது எப்படி..? சிம்பிள் ரெசிபி இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News