ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்

Weight Loss Tips: சில இயறையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 10, 2024, 11:14 AM IST
  • வெந்தயத்தில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
  • குறிப்பாக இதில் அதிக நார்ச்சத்து உள்ளது.
  • இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும் title=

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு இந்நாட்களில் ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். உடல் எடை அதிகரிப்பதால் தன்னம்பிக்கை குறைகிறது. ஆளுமையில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மட்டுமின்றி உடல் பருமன் நமது உடல் ஆரோகியத்திலும் பல வித பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஆகையால் உடல் பருமனை உடனுக்குடன் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியமாகும்.

தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க பலர் பல வித முற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயறையான எளிய வழிகளிலும் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

காலையில் சில ஆரோக்கியமான பானங்களை குடிப்பதன் மூலம் நாம் நமது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம். இவை உடல் பருமனை குறைப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் சரியான பானத்தை தேர்ந்தெடுத்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது மட்டுமின்றி, இது எடையை குறைக்கவும் (Weight Loss), நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும். 

தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்கள் இதோ:

வெந்நீர்

உடல் எடையை குறைப்பதில் மிக எளிதான மற்றும் மிக சக்திவாய்ந்த பானமாக கருதப்படுவது வெந்நீர். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், உடல் நீரேற்றமாக இருப்பதோடு, செரிமான அமைப்பும் சீராக வேலை செய்து ஆரோக்கியமாக இருக்கிறது. காலையில் குடிக்கும் வெதுவெதுப்பான நீர் குடல் இயக்கத்தையும் சீராக்குகிறது. இது மட்டுமின்றி இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது, இது உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் எளிதாக உடல் எடையும் குறைகிறது. 

கிரீன் டீ

க்ரீன் டீ (Green Tea) ஒரு ஆரோக்கியமான பானமாக கருதப்படுகின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. கிரீன் டீ உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. கிரீன் டீயில் கேடசின் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் கலோரிகளை விரைவாக எரிக்க உதவி கிடைக்கின்றது. 

வெந்தய நீர்

வெந்தயத்தில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதனால், ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. செரிமானமும் வெந்தய நீரால் சீராகின்றது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிக்கலாம். இது தவிர இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் வெந்தய நீர் மிக உதவியாக இருக்கும். 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..

இஞ்சி நீர்

உடலில் அதிகமாகும் கொழுப்பைக் குறைக்க இஞ்சி (Ginger) மிகவும் உதவியாக இருக்கின்றது. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால், செரிமானம் துரிதப்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல் உடலில் இன்சுலின் அளவையும் இது கட்டுப்படுத்துகிறது. இஞ்சி டீ செய்தும் குடிக்கலாம். 

சியா விதை தண்ணீர்

சியா விதைகளில் (Chia Seeds) பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த நார்ச்சத்துகள் தண்ணீரை உறிஞ்சுவதால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. உடல் எடை குறையும் போது உடலுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க சியா விதைகள் உதவியாக இருக்கும்.

கவனத்தில் கொள்க

காலையில் இந்த ஆரோக்கியமான பானத்தை குடிப்பதால் மட்டும் உடல் எடை குறையாது. இதனுடன், சீரான, ஆரோக்கியமான, சரியான அளவு உணவை உட்கொள்வது அவசியமாகும். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வது மிக அவசியம். இந்த பானங்களை உட்கொள்ளும் முன்னர், உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது உடல்நலப் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகவும். இந்த பானங்களில் சர்க்கரை அல்லது தேன் சேர்ப்பதை தவிர்ப்பதும் அவசியமாகும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடலை ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News