உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..

Sherin Shringar Weight Loss Secrets : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாக இருக்கும் ஷெரின், தான் உடல் எடையை குறைக்க என்னென்ன செய்தார் என்பது குறித்து பேசியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 9, 2024, 05:45 PM IST
  • நடிகை ஷெரினின் வெயிட் லாஸ் சீக்ரெட்
  • தினமும் செய்த விஷயம்
  • புரத உணவுகளை எடுத்துக்கொண்டாராம்!
உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்.. title=

Sherin Shringar Weight Loss Secrets : உடல் எடையை குறைப்பது என்பது டிரான்ஸ்பர்மேஷன் போட்டோக்களை பார்க்கும் அளவிற்கு சாதாரணமானது அல்ல. பல மாத உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் விடாமுயற்சி இருந்தால் மட்டுமே நம்மால் உடல் எடையை குறைக்க முடியும். இவ்வுலகில், பல லட்சம் பேரை பாதித்த பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பாக உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. 

உடல் எடை அதிகரிப்பிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒரு சிலருக்கு மரபியல் பிரச்சனை, ஒரு சிலருக்கு உடல் நலனில் இருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்பு, ஒரு சில பெண்களுக்கு பி.சி.ஓ.எஸ், தைராய்டு உள்ளிட்ட நோய் பாதிப்புகள், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், ஆரோக்கியமற்ற லைஃப்ஸ்டைல் என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே பாேகலாம். இவை அனைத்தையும் கலைந்து, சரியான உணவு பழக்கத்தை நம் வாழ்வில் அறிமுகப்படுத்தினால் மட்டுமே நம்மால் சரியாக உடல் எடையை குறைக்க முடியும். அப்படி, விடாமுயற்சியுடன் தன் உடல் எடையை குறைத்த ஒரு நடிகைதான் ஷெரின். 

நடிகை ஷெரின்:

விசில் படத்தில் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் ஷெரின். இவரை தமிழில் அறிமுகப்படுத்திய படம், ‘துள்ளுவதோ இளமை’. இதில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். தொடர்ந்து விசில் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து நடித்து வந்த இவர், திடீரெண்டு 2015ஆம் ஆண்டுக்கு பிறகு மொத்தமாக நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 

பின்னர் ஒரு சில நாட்களுக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் உடல் பருமனுடன் காணப்பட்டார். பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கு பெற்ற இவர், இறுதி வரை பயணித்த போட்டியாளர்களுள் ஒரவராக இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த இவர், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். ஆனால் இம்முறை தனது உடலை மொத்தமாக மாற்றி, எடை குறைந்து காணப்பட்டார். இதை செய்ய அவர் தினமும் செய்தவை, சாப்பிட்டவை என்னென்ன தெரியுமா? 

தினசரி உடற்பயிற்சி:

நாம் உடல் எடையை குறைக்க விரும்பினால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். தன் எடையை குறைக்க விரும்பிய ஷெரினும் தினமும் உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார். தன் முயற்சிகளின் மீதும் தன் மீதும் நம்பிக்கை வைத்த இவர், தொடர்ந்து தினமும் கார்டியோ மற்றும் ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் உடற்பயிற்சிகளை செய்திருக்கிறார். இது, அவர் உடல் தளர்வாகவும் தசை வலுவாகவும் உதவி செய்திருக்கிறது.

யோகா மற்றும் ஸ்ட்ரெட்சிங்:

யோகாசனம் மற்றும் கை-கால்களை ஸ்ட்ரெட்ச் செய்வது உடல் எடையை குறைக்க உதவும் என்பது, மருத்துவர்களின் பரிந்துரை. இது குறித்து பழங்கால மருந்துகளும் பேசுகிறது. அந்த வகையில், தன் மன அழுத்தத்தை போக்க, உடலை ரிலாக்ஸ் செய்ய மற்றும் எடையை குறைக்க என பல்வேறு காரணங்களுக்காக யோகா செய்திருக்கிறார் ஷெரின். இது அவரது உடலை ஃபிட் ஆக்கியதுடன் மனதையும் வலிமைபட செய்திருக்கிறது. 

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

ஸ்ட்ரெந்த் டிரைனிங்:

இந்த வகை உடற்பயிறிச்கள், உடல் எடை குறைப்பிற்கு மிகவும் உதவுபவை ஆகும். வெயிட் லிஃப்ட் செய்வது, தசை பயிற்சிகள் மற்றும் டம்புள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது தசைகளை இறுக செய்து, எடை இழப்பிற்கு உதவும். உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். 

சரியான நேரத்திற்கு சாப்பாடு..!

உடல் எடை அதிகரிப்பதற்கு இன்னொரு காரணம், நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதும்தான். இதை அறிந்துகொண்ட ஷெரின் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேலைகளும் சரியான நேரத்திற்கு கால தாமதம் செய்யாமல் சாப்பிட்டு விடுவாராம். இதுவும் இவர் உடலில் மெட்டபாலிசத்தை ஆக்டிவாக வைத்துக்கொள்ள உதவி இருக்கிறது. 

புரத உணவுகள்:

உடல் எடையை குறைக்க புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். மீண்ட், டோஃபு, கடலை என மெல்லிய புரதம் நிறைந்த உணவுகளை தனது டயட்டில் சேர்த்துக்கொண்டுள்ளார் ஷெரின். 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News