கன்னாபின்னானு எடை எறுதா? கச்சிதமா குறைக்க கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்க

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க கருஞ்சீரகம் மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2024, 09:23 PM IST
  • எலுமிச்சை சாறுடன் கருஞ்சீரகம்.
  • தேனுடன் கருஞ்சீரகம்.
  • சூடான தண்ணீரில் கருஞ்சீரகம் .
கன்னாபின்னானு எடை எறுதா? கச்சிதமா குறைக்க கருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்க

Weight Loss Tips: நமது தினசரி உணவில் நாம் பயன்படுத்தும் பல உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்தின் மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கின்றன. இவற்றை நாம் தினமும் சரியான அளவில் உட்கொண்டாலே, பல வித நோய்களுக்கு தீர்வு கிடைப்பதோடு, பல நோய்கள் நம்மை அண்டாமலும் நம்மை காத்துக்கொள்ளலாம். அப்படி ஒரு ஆரோக்கியமான சமையலறை பொக்கிஷத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

கருஞ்சீரகம்

பல ஆண்டுகளாக கருஞ்சீரகம் (Black Cumin Seeds) நமது உணவிலும் மருத்துவத்திலும் அங்கமாக இருந்து வருகின்றது. இதில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் புதைந்து கிடக்கின்றன. பல வித மருத்துவ முறைகளில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. நபிகள் நாயகம், `இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது' என்று இதன் சிறப்பை பற்றி கூறியுள்ளார். இதில், அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளன. உடலின் பல பிரச்சனைகளுக்கு இதில் தீர்வு உள்ளது. 

கருஞ்சீரகத்தினால் பின்வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்

- நோய் எதிர்ப்பு சக்தி

- நீரிழிவு நோய்

- இரத்த அழுத்தம் 

- அதிக கொலஸ்ட்ரால்

- இதய ஆரோக்கியம்

இவை தவிர உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) கருஞ்சீரகம் மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. சரியான வழியில் கருஞ்சீரகத்தை உட்கொண்டால், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை குறைக்க முடியும். இதில் உள்ள பண்புகள் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, அதிக கொழுப்பு சேராமலும் பார்த்துக்கொள்கிறது. இது வயிற்றில் படிந்திருக்கும் கொழுப்பை குறைக்கவும் மிக உதவியாக இருக்கும். 

மேலும் படிக்க | Vitamin E: அழகை பேரழகாக்கும் மந்திரம்! இது வைட்டமின் ஈ சொல்லும் அழகு தந்திரம்!

உடல் எடையை குறைக்க இந்த வழிகளில் கருஞ்சீரகத்தை உட்கொள்ளலாம் 

எலுமிச்சை சாறுடன் கருஞ்சீரகம் 

எலுமிச்சை சாறுடன் (Lemon) கருஞ்சீரகத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். இதற்கு முதலில் சிறிதளவு கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும். அதை நன்றாக கலந்து ஓரிரு நாட்கள் வெயிலில் வைக்கவும். அதன் பிறகு ஒரு நாளைக்கு இரு முறை 5-6 கருஞ்சீரக விதைகளை உட்கொள்ளவும். இப்படி செய்து வந்தால் சில நாட்களில் உடல் எடை குறையத் தொடங்கும். 

தேனுடன் கருஞ்சீரகம்

தேனுடன் (Honey) கருஞ்சீரகத்தை சேர்த்து உட்கொண்டால் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம். இதற்கு, ஒரு கிளாஸ் சூடான நீரில் கருஞ்சீரக பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த நீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இந்த நீர் உடல் பருமனை விரைவாக சரி செய்யும். 

கருஞ்சீரக டீ

கருஞ்சீரக டீ (Cumin Tea) உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவும். கருஞ்சீரக டீ தயாரிக்க, ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, அதில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி பருகவும். தேவைப்பட்டால் இதில் தேன் சேர்க்கலாம். இந்த டீயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, குறிப்பாக தொப்பை கொழுப்பு (Belly Fat) குறையும். 

சூடான தண்ணீரில் கருஞ்சீரகம்  

இதற்கு முதலில் கருஞ்சீரகத்தை அரைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த கருஞ்சீரக தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் மிக குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கவும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உங்கள் எடையை வேகமாக குறைக்க முடியும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | PCOS Remedies: பிசிஓஎஸ்-ல் இருந்து விடுதலை பெறுவது எப்படி? இதோ சிம்பிள் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News