இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதாரில் விவரங்களை புதுப்பிக்க ரூ. 50 கட்டணமாக வசூலிக்கிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 14 வரை ஆன்லைன் வாயிலாக ஆதாரில் இந்திய குடிமக்கள் தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற பொதுவான விவரங்களை இலவசமாக மாற்றவோ அல்லது திருத்தவோ வாய்ப்பு வழங்கி உள்ளது. ஆதாரில் உள்ள சில விவரங்களை ஆன்லைனில் இலவசமாக மாற்றம் செய்ய முடியும் என்றாலும், தங்கள் புகைப்படம், கருவிழி அல்லது பிற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க, ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் சென்று அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிப்பு, கைரேகைகள், கருவிழி ஸ்கேன் மற்றும் பிற பயோமெட்ரிக் தரவுகளை ஸ்கேன் செய்ய பதிவு மையங்களில் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டியதன் காரணமாக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | HRA 3% அதிகரிக்கலாம், ரூ.20160 வரை சம்பளம் அதிகரிக்கும்! யாருக்கு வாடகை உயரும்?
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைப்பான UIDAI, ஆதார் அட்டை விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது மக்களின் விவரங்கள் துல்லியமாகவும் அப்டேட்டுடன் இருப்பதை உறுதி செய்கிறது. ஆதார் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க, மக்கள் தங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது. திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பெயர் மற்றும் முகவரி போன்ற அடிப்படை மக்கள்தொகை விவரங்களில் மாற்றங்கள் தேவைப்படலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறிப்பிடுகிறது. இதேபோல், வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் போது, முகவரி மற்றும் மொபைல் எண்ணில் மாற்றங்கள் தேவைப்படலாம். திருமணம் அல்லது வீட்டில் உள்ளவர்கள் மரணம் போன்ற நிகழ்வுகளால் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பிற சூழ்நிலைகளும் ஆதார் அப்டேட்க்கு முக்கிய காரணங்களாக அமைக்கின்றன.
UIDAIன் அதிகாரப்பூர்வ இணையதளம், ஒரு நபரை பற்றிய முழு விவரங்களை சரியான முறையில் பராமரிப்பது அவருக்கே பின்னாளில் உதவிகரமாக அமைகிறது. பல்வேறு சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஆதார் நம்பகமான ஆதாரமாக உள்ளது. ஒரு குழந்தை 15 வயதை எட்டும்போது, புதுப்பித்தலுக்குத் தேவையான அனைத்து பயோமெட்ரிக் தரவையும் வழங்க வேண்டும் என்று அரசாங்க வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
ஆன்லைனில் ஆதார் அட்டையை புதுப்பிப்பது எப்படி?
- UIDAI இணையதளத்திற்கு (uidai.gov.in) சென்று பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கவும்.
- பிறகு "எனது ஆதார்" அமைப்பை கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு "OTP ஐ அனுப்பு" என்பதைக் கிளிக் செய்யவும்.
- பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு "உள்நுழை" என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் புதுப்பிக்க விரும்பும் உங்கள் விவரங்களைத் தேர்ந்தெடுத்து புதிய தகவலை கவனமாக நிரப்பவும்.
- தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் புதுப்பிக்கப்பட்ட விவரங்களைச் சரிபார்க்க தேவையான துணை ஆவணங்களின் ஸ்கேன்களைப் பதிவேற்றவும்.
- செயல்முறையை முடிக்க "புதுப்பிப்பு கோரிக்கையைச் சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்.
- கண்காணிப்பு நோக்கங்களுக்காக SMS மூலம் பெறப்பட்ட புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) குறித்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க | முதலீடு செய்ய சூப்பர் ஆஃப்ஷன்! டாப் 5 இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ