IBPS Clerk Admit Card 2022: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) கிளார்க் அனுமதி அட்டை வெளியிடப்பட்டது. இன்று IBPS கிளார்க் 2022 தேர்வுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in-ல் அட்மிட் கார்டு வெளியிட்டுள்ளது. உங்கள் அட்மிட் கார்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை குறிப்பிட்டு தேர்வு தேதிக்கு முன்பே IBPS Clerk அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யதுக்கொள்ளுங்கள்.
IBPS கிளார்க் பிரிலிம்ஸ் தேர்வு 2022 வரும் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இந்த ஆண்டு வங்கி பணியாளர் தேர்வாணையம் 6000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை அறிவித்தது. IPBS கிளார்க் தேர்வு 2022-ல் கலந்துகொள்ளவிருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அனுமதி அட்டை மற்றும் செல்லுபடியாகும் அடையாளச் சான்று ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அட்மிட் கார்டைப் பதிவிறக்குவதற்கான விவரங்களை காணலாம்.
மேலும் படிக்க: JOB Openings: ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை ரெடி: அப்ளை பண்ன நீங்க ரெடியா
IBPS கிளார்க் அனுமதி அட்டை 2022 எப்படி பதிவிறக்கம் செய்வது:
- IBPS இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in செல்லவும்.
- அதன் முகப்புப் பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள IBPS கிளார்க் 2022 அட்மிட் கார்டு இணைப்பைக் கிளிக் செய்யவும்
- ஒரு புதிய உள்நுழைவு பக்கம் திறக்கப்படும்
- அதில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிடவும்
- அதன் பிறகு உங்கள் சான்றுகளை சமர்ப்பிக்கவும்
- IBPS ப்ரிலிம்ஸ் அழைப்புக் கடிதம் திரையில் காட்டப்படும்
- அட்மிட் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்
- அட்மிட் கார்டை Pdf வடிவத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
IBPS முதல்நிலை தேர்வு எந்த வடிவத்தில் இருக்கும்:
IBPS கிளார்க் தேர்வு 2022 மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் மற்றும் 100 கேள்விகளைக் கொண்டிருக்கும். அதாவது ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்[பெண்ணுக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும். கேள்விகள் MCQ வடிவத்தில் கேட்கப்படும்.
மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா - உடனே இதை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ