மூன்றே ஆண்டுகளில் 92 இருந்து 726 ரூபாயாக உயர்ந்த பங்குவிலை! பட்டை கிளப்பும் அதானி குழுமம்!

Adani Power stock: அதானி குழும பங்கு வெறும் மூன்றே ஆண்டுகளில் அட்டகாசமான வருமானத்தை அளித்துள்ளது. அதானி குழுமத்தின் இந்த அதிரடி லாபம் கொடுக்கும் பங்கு எது? இதில் முதலீடு செய்தால் இனியும் லாபம் கிடைக்குமா? கேள்விகளுக்கான பதில்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2024, 10:34 AM IST
  • அதானி குழுமத்தின் அதிரடி லாபம் கொடுக்கும் பங்கு
  • மூன்றே ஆண்டுகளில் வானளவு உயர்ந்த லாபம்
  • எதிர்காலத்திலும் சூப்பர் லாபம் கொடுக்கும் பங்கு
மூன்றே ஆண்டுகளில் 92 இருந்து 726 ரூபாயாக உயர்ந்த பங்குவிலை! பட்டை கிளப்பும் அதானி குழுமம்! title=

Shares of Adani Power hit a record high: அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் சராசரியை விட அதிக அளவு மதிப்பு அதிகரிப்புடன் வர்த்தகமாகி வருகிறது. அதானி பவரின் பங்குகள் தினசரி நல்ல லாபத்தைக் கொடுத்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 670% அதிகரித்துள்ளது. மே 30, 2021 அன்று ரூ.91.95 என்ற அளவில் இருந்த அதானி குழுமப் பங்கு விலை தற்போது மும்பை பங்குச்சந்தையில் ரூ.725.75 என்ற அளவில் உள்ளது. அதானி பவர் பங்குகள் ஒரு வருடத்தில் 185% மற்றும் ஐந்து ஆண்டுகளில் 1315% என்ற அளவில் வருமானத்தை ஈட்டியுள்ளன.

பங்கு வர்த்தகத்தின் கடைசி அமர்வில், அதானி குழுமத்தின் பங்கு 3.98% உயர்ந்து ரூ.725.75 ஆக உயர்ந்தது, இதற்கு முதல் நாளான்று ரூ.698.20 என்ற விலையில் வர்த்தகமானது. இருந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்தம் 2.74 லட்சம் பங்குகள் பிஎஸ்இயில் ரூ.19.58 கோடி விற்றுமுதலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமப் பங்கு ஒரு வருடத்தில் குறைந்த அளவிலான ஏற்ற இறக்கங்களையே கண்டது என்பதும், அதன் ஒரு வருட பீட்டா 0.6 என்ற அளவில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. இத்தனை கோடிகளா!!!

ஆனால், அதிக விலைக்கு வாங்கப்பட்ட மண்டலத்திலோ அல்லது அதிக விற்பனையான மண்டலத்திலோ  அதானி குழுமப் பங்குகள் வர்த்தகம் செய்யப்படவில்லை என்பதும், அதானி பவரின் ஒப்பீட்டு வலிமை குறியீடு (RSI) 67.1 ஆக உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் உச்சகட்ட மின்தேவை இந்த கோடைக்காலத்தில் 260 ஜிகாவாட் என்ற அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின்சாரமே அடிப்படையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதானி பவர் மற்றும் பிற மின் உற்பத்தியாளர்கள் இந்த உயர் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தான் அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒரு கட்டத்தில் அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 48 சதவீதம் சரிந்து 2,737 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டின் நிகர லாபம் ரூ. 5,243 கோடியாக இருந்தது. அதன்பிறகு வேகம் பிடித்த அதானி பவர் நிறுவனத்தின் நிகர லாபம், முந்தைய டிசம்பர் காலாண்டில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.10,242.06 கோடியாக இருந்தது. அதுவே 4ஆம் 023-24 காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்து ரூ.13,363.69 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | நீயா நானா? முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரிய பணக்காரர் பட்டம் வென்றார் கெளதம் அதானி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News