October 1 முதல் பல மாற்றங்கள்: சம்பள அமைப்பு, வங்கி டெபாசிட்டில் நேரடி தாக்கம்

ஆட்டோ டெபிட் கட்டண முறையின் கீழ், வங்கிகள் மற்றும் Paytm-Phonepe போன்ற டிஜிட்டல் தளங்களும், பணத்தை டெபிட் செய்யும் முன்னர் வாடிக்கையாளர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2021, 12:51 PM IST
  • அக்டோபர் 1 முதல் நிதி அமைப்பில் பெரிய மாற்றம்.
  • புதிய ஊதியக் குறியீட்டின் கீழ் ஊழியர்களின் சம்பள அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும்.
  • முதலீட்டாளர்களுக்கு KYC செய்யப்படுவது கட்டாயமாகும்.
October 1 முதல் பல மாற்றங்கள்: சம்பள அமைப்பு, வங்கி டெபாசிட்டில் நேரடி தாக்கம்  title=

Changes From 1st October: அக்டோபர் 1 முதல் நிதி அமைப்பில் பெரிய மாற்றம் வரப்போகிறது. புதிய ஆட்டோ டெபிட் கட்டண முறை அன்று முதல் அமலுக்கு வருகிறது. இனி, ஆட்டோ டெபிட் கட்டண முறையின் கீழ், வங்கிகள் மற்றும் Paytm-Phonepe போன்ற டிஜிட்டல் தளங்களும், நிறுவல் அல்லது ஆடோமேடிக் பில் கட்டணத்துக்கு, பணத்தை டெபிட் செய்யும் முன்னர் வாடிக்கையாளர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.

அக்டோபர் மாதம் தொடங்கியவுடன், உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் சம்பளம் தொடர்பான பல விதிகள் மாறவுள்ளன. இந்த விதிகள் அமலுக்கு வந்த பின்னர், உங்கள் ஊதியத்தில் (Salary) நேரடி தாக்கம் இருக்கும். மேலும் வங்கிகளில் செபாசிட் செய்யப்படும் சம்பளமும் குறையலாம். இது தவிர, வங்கியில் இருக்கும் பணம் தொடர்பான மாற்றங்களும் ஏற்படும். இதை வாடிக்கையாளர்கள் கவனித்துக் கொள்வது அவசியமாகும்.

சம்பள அமைப்பில் மாற்றம்

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ் (New Wage Code Salary Structure) ஊழியர்களின் சம்பள அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும். டேக் ஹோம் சம்பளம் குறைக்கப்படலாம். ஊதியக் குறியீடு 2019 -ன் (Wage Code Act, 2019) படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் நிறுவனத்தின் (CTC) செலவில் 50% க்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை கணிசமாகக் குறைத்து, அதிகமான கொடுப்பனவுகளை வழங்குகின்றன. அக்டோபர் 1 முதல், புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

ALSO READ: New Wage Code:ஊதியம், விடுமுறைகள், வேலை நேரம் அனைத்திலும் பெரிய மாற்றம்

வர்த்தகக் கணக்கிற்கான KYC விதிகள்

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) முன்பு வர்த்தகக் கணக்குகளில் (Trading Account) முதலீட்டாளர்களுக்கு KYC ஐ கட்டாயமாக்கியது. முன்னதாக அதன் புதுப்பிப்புக்கான கடைசி தேதி 31 ஜூலை ஆக இருந்தது. ஆனால் பின்னர் அது செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டது.

இப்போது முதலீட்டாளர்களுக்கு KYC செய்யப்படுவது கட்டாயமாகும். KYC விவரங்களில் முகவரி, பெயர், பான் (PAN), மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, வருமான வரம்பு போன்றவற்றை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.

அக்டோபர் 1 முதல் ஆட்டோ டெபிட் கொடுப்பனவுகளில் பிரச்சனை ஏற்படலாம்

நாட்டில் டிஜிட்டல் கட்டண முறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் பொருட்டு கூடுதல் காரணி அங்கீகாரத்தை (AFA) செயல்படுத்த RBI அறிவுறுத்தியுள்ளது. ரெகரிங் ஆன்லைன் கட்டண முறையில் வாடிக்கையாளர்களின் நலன்களையும் வசதிகளையும் மனதில் வைத்தும், மோசடிகளிலிருந்து வாடிக்கையாளர்களை காக்கும் எண்ணத்திலும், AFA ஐப் பயன்படுத்தி ஒரு கட்டமைப்பை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் IBA வின் முறையீட்டை கருத்தில் கொண்டு, அதை செயல்படுத்துவதற்கான காலக்கெடு மார்ச் 31, 2021-லிருந்து செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் இந்த கட்டமைப்பை செயல்படுத்த முழு ஏற்பாடுகளையும் செய்ய நேரம் கிடைத்தது.

இந்த செயல்முறை OTP மூலம் நிறைவுசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்பிஐ விதிகளின்படி, ஆடோ பேமெண்ட் செயல்முறைகளுக்கு முன், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பை கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே, வங்கியால் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியும்.

ALSO READ: Basic Salary Hike: ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கும், அக்டோபர் 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News