மத்திய பிரதேசத்தில் கோசாலைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அறிவித்துள்ளது. கோசாலை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுதன கூறப்பட்டுள்ள நிபந்தனையாகும்.
கால்நடைத் துறையின் கூற்றுப்படி, பசு பாதுகாப்பிற்காகவும் பசு பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் மாடு வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு வாரியத்திற்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் வருமான வரித் துறை ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இனி, மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) வசிப்பவர்கள் கோசாலையில் நன்கொடை அளித்தால், அதற்கு வருமான வரி தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நன்கொடை அளிப்பதற்கு முன், நீங்கள் நன்கொடை அளிக்கும் கோசாலை பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் கோசாலை பதிவு செய்யப்படாவிட்டால், நன்கொடைத் தொகையின் அடிப்படையில் வருமான வரி விலக்கின் பலனை நீங்கள் பெற முடியாது.
கோசாலைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கான ஒரு போர்ட்டலை மாநில அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தீவனம், நீர், கொட்டகை மற்றும் பிற பணிகளுக்காக மக்கள் கோசாலைகளுக்கு நன்கொடை அளிக்கலாம்.
ITR-ஐ டிசம்பர் 31 க்குள் சமர்ப்பிக்கலாம்
வருமான வரித் துறை, ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை டிசம்பர் 31 ஆக நிர்ணயித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும் தேதி 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Paytm சேவை இனி இலவசம் அல்ல, இந்த முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ளுங்கள்!!
வருமான வரித் துறை (Income Tax Department) முதலில் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து 2020 30 ஜூன் என்றாக்கியது. இதன் பின்னர், இது ஜூலை 31 ஆகவும், பின்னர் செப்டம்பர் 30 ஆகவும் பின்னர் நவம்பர் 30 ஆகவும் நீட்டிக்கப்பட்டது. இப்போது கடைசி தேதி டிசம்பர் 31, 2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆக உள்ள போதிலும், வருவாயின் மதிப்பீட்டு காலம் 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை தான் இருக்கும்.
இந்த பிரிவின் கீழ் வருமான வரி சலுகை கிடைக்கிறது
வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் நன்மை உள்ளது. அரசாங்க திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் இந்த வரி விலக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிரிவில் EPF, PPF-பங்களிப்பு, சுகன்யா சமிர்தி யோஜனா, NSC, வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வரி சேமிப்பு நிதி போன்றவை அடங்கும். பிரிவு 80G-ன் கீழ், சில நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ALSO READ: இன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன? - இதோ முழு விவரம்..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR