IRDAI Advisory: இந்த நிறுவனத்திலிருந்து சுகாதார காப்பீடு வாங்காதீங்க, எச்சரிக்கும் ஐஆர்டிஏஐ

IRDAI Advisory For Health Insurance : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 15, 2022, 05:03 PM IST
  • இந்த நிறுவனத்திலிருந்து சுகாதார காப்பீட்டை வாங்க வேண்டாம்.
  • ஐஆர்டிஏஐ விடுத்த எச்சரிக்கை.
  • நிறுவனம் பெங்களூருவில் உள்ளது.
IRDAI Advisory: இந்த நிறுவனத்திலிருந்து சுகாதார காப்பீடு வாங்காதீங்க, எச்சரிக்கும் ஐஆர்டிஏஐ title=

ஐஆர்டிஏஐ சுகாதார காப்பீட்டு ஆலோசனை: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, நோய்களின் சிகிச்சைக்கான செலவினங்களின் அதிகரிப்பு காரணமாக, சுகாதார காப்பீட்டு (ஹெல்த் இன்சூரன்ஸ்) பாலிசியை வாங்குபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஒரு அறிக்கையின்படி, முன்னர், சுகாதார காப்பீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை டயர்-1 நகரங்களில் மிக அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் உள்ளவர்களும் அதிக அளவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வருகின்றனர்.

சில நிறுவனங்கள் சுகாதார காப்பீட்டை தவறான வழியில் விற்கின்றன

ஏதேனும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், நிதி ரீதியாக சிகிச்சைக்கு உதவுகிறது. ஆனால் சில நிறுவனங்கள் தவறான வழியில் பாலிசிகளை விற்பனை செய்கின்றன. இதன் காரணமாக உங்கள் பணம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) சுகாதார காப்பீட்டை வாங்குபவர்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.

முக்கியமான விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை

பல நேரங்களில் மக்கள் அவசர அவசரமாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குகிறார்கள். ஆனால் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. டிஜிட்டல் யுகத்தில், பலர் ஆன்லைன் தளங்களில் இருந்து பாலிசிகளை எடுக்கிறார்கள். 

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பாலிசியை வாங்கும் நிறுவனம் ரெகுலேட்டரால் அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டியது மிக அவசியம் என ஐஆர்டிஏ அறிவுறுத்துகிறது.

மேலு படிக்க | 7th Pay Commission: டிஏ-வைத் தொடர்ந்து பிற கொடுப்பனவுகளிலும் உயர்வு, ஊதியத்தில் பம்பர் ஏற்றம் 

உங்கள் பணம் கிடைக்காமல் போகலாம்

அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திடம் இருந்து பாலிசி எடுத்தால் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். சுகாதார அவசரநிலையில் நீங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போகலாம். இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் (ஐஆர்டிஏஐ) அதன் இணையதளத்தில் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனம் குறித்து மக்களை எச்சரித்துள்ளது.

நிறுவனத்தின் தகவல்

13 ஏப்ரல் 2022 அன்று ஐஆர்டிஏ வெளியிட்ட அறிவிப்பில், ஈவன் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (Even Healthcare Pvt Ltd) அப்படிப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்படாத நிறுவனம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஐஆர்டிஏ-வில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அதன் ஆன்லைன் தளமான https://even.in இலிருந்து சுகாதாரக் காப்பீட்டை எடுத்தால் நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம்.

இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் பெங்களூருவில் உள்ளது

இணையதளத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஐஆர்டிஏ, 'ஈவன் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் சுகாதாரத் திட்டத்தை (Even Healthcare Pvt Ltd) வழங்குவது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் 311, 6வது மெயின் ரோடு, HAL 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூர், கர்நாடகா-560038 என்ற முகவரியில் உள்ளது. ஈவன் ஹெல்த்கேர் வழங்கும் திட்டங்கள் சுகாதார உடல்நலக் காப்பீடு அல்ல.’ என கூறியுள்ளது.

மேலும் படிக்க | UPI Payment Mistakes:இதை செய்யத் தவறினால் உங்கள் கணக்கு காலியாகிவிடும் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News