இந்திய ரயில்வே புதுப்பிப்பு: இந்திய ரயில்வேயால் பயணிகளுக்காக ஒரு பெரிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால், இப்போது ரயில்வே தரப்பிலிருந்து பெரிய பலனைப் பெறப் போகிறீர்கள். பயணிகளின் பயணத்தை எளிதாக்க ரயில்வே ஒரு சிறப்பு முடிவை எடுத்துள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உடல் ஊனமுற்றோருக்கு லோயர் பெர்த் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உடல் ஊனமுற்றோருடன் பயணிக்கும் நபர்களுக்கு லோயர் பர்த் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வயதானவர்களுக்கும் வசதி கிடைக்கும்
இதனுடன், முதியோர் மற்றும் பெண்களுக்கான கீழ் பெர்த் வசதியையும் ரயில்வே தொடங்கியுள்ளது. இது தொடர்பான உத்தரவு ரயில்வே வாரியம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே மார்ச் 31-ஆம் தேதி அன்று பல்வேறு மண்டலங்களுக்கு உத்தரவை வெளியிட்டுள்ளது.
ரயில்வே உத்தரவு பிறப்பித்தது
ஸ்லீப்பர் வகுப்பில் நான்கு இருக்கைகள் (இரண்டு லோயர் மற்றும் இரண்டு மிடிள் பர்துகள்), ஏசி3 பெட்டியில் இரண்டு இருக்கைகள் (ஒரு லோயர் மற்றும் ஒரு மிடிள் பர்த்), ஏசி3 (எகானமி) பெட்டியில் இரண்டு இருக்கைகள் (ஒரு லோயர் மற்றும் ஒரு மிடிள் பர்த்) உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் என ரயில்வே வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சியான பயணத்திற்கு... ரயில்வே அளிக்கும் முன்னுரிமைகள்!
முழு டிக்கெட் தொகையை செலுத்த வேண்டும்
இதனுடன், கரீப் ரத் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கீழ் பெர்த் மற்றும் 2 மேல் இருக்கைகள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வசதியை பெற இவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். 'ஏசி சேர் கார்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்படும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்
மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்லீப்பர் பிரிவில் 6 லோயர் பெர்த் ஒதுக்கப்படும் என ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், 3ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு முதல் ஐந்து கீழ் பெர்த்களும், 2ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று முதல் நான்கு கீழ் பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘மூத்த குடிமக்களுக்கு ரயிலில் லோயர் பர்துக்கான வசதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் இதற்கென தனி ஏற்பாடு உள்ளது.’ என்றார். 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள் கீழ் பெர்த்திற்கு எந்த ஆப்ஷனையும் தனியாக தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இந்த பயணிகளுக்கு தானாக ரயில்வே தரப்பிலிருந்து கீழ் பெர்த் கிடைக்கும்.
மேலும் படிக்க | கோடை விடுமுறை... மக்கள் வசதிக்காக ரயில்வேயின் சிறப்பு சேவைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ