மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 19, 2022, 08:25 PM IST
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
  • பல்வேறு காலி பணியிடங்கள் இருக்கின்றன
  • நவம்பர் 25ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

மதுரை காமராசர் பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate-I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate-I பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree(M.Sc/ M.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

NET / GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு – ரூ.31,000 ஊதியம் வழங்கப்படும்

NET / GATE தேர்ச்சி பெறாதவர்களுக்கு – ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து நவம்பர் 25ஆம் தேதிக்குள் தேதிக்குள் rajendhran.biological@mkuniversity.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு லாட்டரி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்

மேலும் படிக்க | TNPSC: 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News