NLC நிறுவனத்தில் Freshersக்கு வேலை வாய்ப்பு - 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

NLC நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 90 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 19, 2022, 12:56 PM IST
  • என்.எல்.சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
  • விண்ணப்பிக்க 29ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
NLC நிறுவனத்தில் Freshersக்கு வேலை வாய்ப்பு -  10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் title=

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்‌.எல்‌.சி.இந்தியா நிறுவனத்தில்‌, தொழிற்‌ பழகுநர்‌ சட்டம்‌ – 1961, இன்‌ விதிகளுக்குட்பட்டு, கீழ்‌ கண்ட பிரிவுகளில்‌ தொழில்‌ பழகுநர்‌ பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிட விவரம்:

Fitter fresher – 20 பணியிடங்கள்
Electrician fresher – 20 பணியிடங்கள்
Welder fresher – 20 பணியிடங்கள்
Medical Lab Technician Pathology – 15 பணியிடங்கள்
Medical Lab Technician Radiology – 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:
01.06.2022 அன்று 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்‌. இதற்கு முன்‌ இப்பயிற்சி பெற்றவர்கள்‌ அல்லது தற்சமயம்‌ பயிற்சியில் இருப்போர்‌ மீண்டும்‌ பயிற்சி பெற தகுதியில்லை. தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்.

மேலும் படிக்க | ₹20 லட்சத்திற்கும் மேலான நிதி பரிவத்தனைக்கான புதிய விதி; மீறினால் 100% அபராதம்

கல்வித் தகுதி:

Fitter, Electrician மற்றும் Welder பதவிக்கு விண்ணப்பதார்கள் 2020 / 2021 / 2022 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Medical Lab Technician பதவிக்கு 12 ஆம் வகுப்பில் Biology/Science Groupல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

Fitter, Electrician பதவிக்கு முதலாம் ஆண்டுக்கு ரூ.8,766 மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு ரூ.10,019 வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி காலம் 24 மாதங்கள் ஆகும்.

Welder, Medical Lab Technician பதவிக்கு முதலாம் ஆண்டுக்கு ரூ.8,766 மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு ரூ.10,019 வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி காலம் 15 மாதங்கள் ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் மற்றும் அரசின் இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணைய முகவரிக்கு சென்று ONLINE REGISTRATION FORMல் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து 20.07.2022 காலை 10.00 மணி முதல்‌ 29.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு: நிதி அமைச்சகம் கூறுவது என்ன?

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை PRINT எடுத்து அதனுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை தபால் மூலமாக துணை பொதுமேலாளர்‌, கற்றல்‌ மற்றும்‌ மேம்பாட்டு மையம்‌, என்‌.எல்‌.சி.இந்தியா நிறுவனம்‌, வட்டம்‌-20, நெய்வேலி-607803 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News