ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு - கை நிறைய சம்பளம்

ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 177 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 11, 2022, 01:04 PM IST
  • ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்
  • மொத்தம் 177 காலி பணியிடங்கள் இருக்கின்றன
ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு - கை நிறைய சம்பளம் title=

Development Assistant காலி பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.34,990 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலதிக விவரங்கள் பின்வருமாறு:

காலி பணியிடங்கள்:

Development Assistant – 173 பணியிடங்கள்

Development Assistant (Hindi) – 4 பணியிடங்கள் என் மொத்தம் 177 காலி பணியிடங்கள் இருக்கின்றன.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | JEE Advance Result 2022: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள்

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13150 முதல் ரூ.34,990வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | UPI விதிகளில் மாற்றம்? ஒருநாளில் எவ்வளவு தொகை டிரான்ஸாக்ஷன் செய்யலாம்?

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://www.nabard.org/ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அக்டோபர் 10ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | FD வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆக்சிஸ் வங்கி: விகித விவரங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News