தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) – ITNT அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் CEO, Head of Admin and Accounts, AVP, Senior Manager ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
காலி பணியிட விவரம்:
தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பில் Chief Executive Officer (CEO), Head of Admin and Accounts, AVP (Marcomm), AVP (Innovation Network), AVP (Iccubation & Coworking), AVP (Makerspace), Senior Manager (Partnership), Senior Manager (Facilities) ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
கல்வித் தகுதி:
Senior Manager (Partnership), AVP (Marcomm) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Senior Manager (Facilities), AVP (Makerspace) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்
Chief Executive Officer (CEO), AVP (Iccubation & Coworking) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Head, Admin and Accounts பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் CA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | கோல் இண்டியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்ப நடைமுறை தொடங்கியது
AVP (Innovation Network) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.E / M.Tech மற்றும் Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Chief Executive Officer (CEO) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள். மற்ற பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Shortlist, HR Interview மற்றும் Written Assessment வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://tnega.tn.gov.in/careers என்ற இணைப்புக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
Senior Manager (Partnership) பணிக்கு விண்ணப்பிக்க 26.06.2022 என்பது இறுதி நாள் என்றும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க 30.06.2022 என்பது இறுதி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR