ஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவியை அந்த இடத்தில் கடித்த கணவர்!!

மனைவி முத்தம் கொடுக்க முயன்றபோது மனைவியின் நாக்கை கணவர் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Updated: Oct 15, 2019, 01:41 PM IST
ஆசையாக முத்தம் கொடுக்க வந்த மனைவியை அந்த இடத்தில் கடித்த கணவர்!!

மனைவி முத்தம் கொடுக்க முயன்றபோது மனைவியின் நாக்கை கணவர் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மனைவி முத்தம் கொடுக்க முயன்றபோது மனைவியின் நாக்கை கணவர் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் தஸ்லீம் அன்சாரி. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அயுப் மன்சூரி வேலைக்குச் செல்லாமல் இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனிடம் சண்டை போட்டுள்ளார். தஸ்லீமிற்கு ஏற்கனவே திருமணமாகி அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். அவரது கணவருக்கு தஸ்லீம் மூன்றாவது மனைவியாவார்.

இந்த நிலையில் வேலைக்குப் போவதற்காக நடந்த இந்த சண்டை எல்லையை மீறிப் போக அயுப் கோபத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்குப் பின்பு வீட்டிற்குத் திரும்பிய கணவன் மனைவியிடம் லிப் கிஸ் கேட்டுள்ளார். தன்னிடம் சண்டை போட்டு விட்டதால் சமாதானம் செய்யத்தான் கேட்கிறார் என நினைத்து மனைவி கணவனின் அருகே ரொமான்ஸூடன் சென்றுள்ளார். அந்த நேரத்தில் கையிலிருந்த கத்தியை எடுத்து அயுப் அவரது மனைவி தஸ்லீமின் நாக்கை அறுத்துவிட்டார். இதனால் தஸ்லீமின் நாக்கு துண்டாகி விட்டது. இதையடுத்து, அவரது மனைவியை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். தனது கணவர் மீது காவல்துறையில் மனைவி வழக்குப்பதிவு செய்துள்ளார்.