மொபைல் மூலம் E-Registration செய்வது எப்படி

இ-பதிவு முறை https://eregistet.tnega.org  என்ற இணையதளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2021, 01:36 PM IST
மொபைல் மூலம் E-Registration செய்வது எப்படி title=

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சென்னையில் ஊரடங்கு (Lockdown) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்பவர்கள் இ -பதிவு (E-Registration) செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய  உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டஙகளுக்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையும்  பயணம் செய்வதற்கு இப்பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ | மக்கள் கோரிக்கையை ஏற்று இ-பதிவில் மீண்டும் சேர்க்கப்பட்டது திருமண பிரிவு

இ-பதிவு செய்வது எப்படி?
* இ-பதிவு முறை https://eregistet.tnega.org  என்ற இணையதளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். 
* இந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன், இதில் நீங்களே எங்கே பயணம் செய்கிறீர்கள்? என ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும். அதிலும் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்
1. வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள்
2. மற்றவர்கள்( மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு நடுவில் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் தனிநபர்கள் மேற்கொள்ளும் பயணப் பதிவுகள்)

* மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் என்றால் இரண்டாது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
* இ- பதிவுக்கு உள்நுழைவதற்கு உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை சரியாக பதிவிடவும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை பதிவு செய்தவுடன். இ- பதிவு பக்கத்துக்கு செல்லும்.

இ-பதிவு பக்கத்தில் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்
1 தனி நபர்/ குழு சாலை வழி பயணம்
2 தனி நபர்/ குழு ரயில்/ விமானம் வழி தமிழ்நாட்டின் உள் நுழைத்தல் .. நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்துக்கொள்ளலாம்

இ-பதிவு விண்ணப்பதாரர் அடையாள சான்று
ஆதார் கார்டு
பான் கார்டு
ஓட்டுநர் உரிமம்
குடும்ப அட்டை
பாஸ்போர்ட்
இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்
இந்த அடையாளச் சான்றுகளில் இருக்கும் எண்ணை பதிவு செய்யவேண்டும்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News