USSD: இணைய வசதி இல்லாமலும் போன் மூலம் பணம் செலுத்தலாம் தெரியுமா?

USSD Payment: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உங்கள் வசதிக்காக ஒரு அற்புதமான சேவையை வழங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2022, 07:10 PM IST
  • உங்கள் மொபைல் மூலம் வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் பணம் அனுப்பலாம், பெறலாம். .
  • இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் இணைய வசதி மய்ட்டுமே.
  • ஆனால், இணையம் இல்லாமலும் இதை செய்ய முடுயும்.
USSD: இணைய வசதி இல்லாமலும் போன் மூலம் பணம் செலுத்தலாம் தெரியுமா? title=

இன்றைய உலகம் டிஜிட்டல் உலகம். டிஜிட்டல் செயல்முறைகள் நமது பல பெரிய பணிகளை எளிதாக்கியுள்ளன. ஒரு காலத்தில், பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வங்கிகளுக்குச் செல்வதில் சிரமமாக இருந்தது. ஆனால், இப்போது உங்கள் மொபைல் மூலம் வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் பணம் அனுப்பலாம், பெறலாம். 

இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் இணைய வசதி மட்டுமே. ஆனால் சில சமயங்களில் இணைய நெட்வொர்க் கிடைக்காததால், பணம் செலுத்தும் / பெறும் சில முக்கிய பணிகள் தடைபடலாம். ஆனால், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உங்கள் வசதிக்காக ஒரு அற்புதமான சேவையை வழங்குகிறது. இதன் மூலம் இணையம் இல்லாமலும் உங்கள் பணத்தை பரிமாற்றலாம்.

இப்படி பணம் செலுத்துங்கள்

கூகிள் பே, போன் பே போன்ற தளங்கள் மூலம் மிக எளிதாக யுபிஐ கட்டணம் செலுத்த முடியும் என்றாலும், இணையம் இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இணைய சேவை இல்லை என்றால், USSD வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் *99# குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த குறியீட்டின் மூலம் இணையம் இல்லாமல் யுபிஐ சேவை மூலம் பணம் அனுப்பலாம். எந்தவொரு அவசரநிலையிலும் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | PNB வாடிக்கையாளர்களுக்கு பெரும் அடி: புது தலைவலி, விவரம் இதோ 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்

1. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து *99# குறியீட்டை டயல் செய்ய வேண்டும்.

2. இப்போது நீங்கள் பாப்அப் மெனுவில் சில விருப்பங்களைக் காண்பீர்கள். இதில் முதல் எண்ணில் பணம் அனுப்பும் ஆப்ஷனைக் (செண்ட் மணி) காண்பீர்கள். அதை தேர்ந்தெடுங்கள்.

3. இப்போது நீங்கள் பணம் செலுத்த விரும்பும் நபரின் எண்ணைத் டைப் செய்து.  ‘பணம் அனுப்பு’ என்னும் விருப்பத்தை (செண்ட் மணி) தேர்ந்தெடுக்கவும்.

4. இப்போது உங்கள் யுபியை உடன் தொடர்புடைய எண்ணை உள்ளிட்டு 'செண்ட் மணி' என்பதைக் கிளிக் செய்யவும்.

5. நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.

6. பாப்அப்பில் வாடகை, கடன், ஷாப்பிங் போன்ற பணம் செலுத்துவதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.

இதை மனதில் கொள்ளுங்கள்

இணையம் இல்லாமல் USSD இன் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் எண்ணை யுபிஐ-இல் பதிவு செய்வது மிகவும் முக்கியம். உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே எண்ணிலிருந்து *99# ஐ டயல் செய்யுங்கள்.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News