இனி SIM இல்லாமலும் தொலைபேசியை பயன்படுத்தலாம்... எப்படி?

LG Corp நிறுவனத்தின் மூன்றாவது பெரிய மொபைல் கேரியரான சிம் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது..!

Last Updated : Sep 9, 2020, 08:00 AM IST
இனி SIM இல்லாமலும் தொலைபேசியை பயன்படுத்தலாம்... எப்படி? title=

LG Corp நிறுவனத்தின் மூன்றாவது பெரிய மொபைல் கேரியரான சிம் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது..!

தென் கொரியாவின் மூன்றாவது பெரிய மொபைல் கேரியரான எல்ஜி அப்ளஸ் (LG Uplus), சிம் இல்லாமல் இயங்கக்கூடிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்நிறுவனம் கூறுகையில், அதன் உலகளாவிய கூட்டாளர்களுடன் மேம்பட்ட செல்லுலார் தொகுதி இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதை பயன்படுத்த பயனர்களுக்கு SIM தேவைப்படாது என்பது குறிப்பிடதக்கது. 

செல்லுலார் சிப்செட் தயாரிப்பாளர் சோனி செமிகண்டக்டர் இஸ்ரேல், உள்ளூர் தகவல் தொடர்பு தொகுதி தயாரிப்பாளர் என்டெமோர் மற்றும் ஜெர்மன் டிஜிட்டல் பாதுகாப்பு தீர்வு வழங்குநர் கீசெக் டிவியன்ட் ஆகியோரின் உதவியுடன் LG அப்ளஸ் ஒரு சரிபார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த யுனிவர்சல் ஒருங்கிணைந்த சர்க்யூட் கார்டு (IUICC) தீர்வுகளை உருவாக்கியுள்ளது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

ALSO READ | VoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது?

சிம் கார்டு பயனரின் தனிப்பட்ட தகவல்களைச் சேமிப்பது அவர்களின் சேவையையும், சலுகைகளையும் அடையாளம் காண உதவுகிறது. IUICC தொழில்நுட்பத்தில், சிம் ஒரு தகவல் தொடர்பு சிப்பின் வேலையைச் செய்யும், இது குரல் மற்றும் தரவு இணைப்பு சேவையை வழங்க உள்ளது. 

சிம் கார்டுக்கு இடம் அல்லது கூடுதல் கூறுகள் தேவையில்லை என்பதால் சாதன உற்பத்தியாளர்களுக்கு சிறிய தயாரிப்புகளை தயாரிக்க சமீபத்திய தொழில்நுட்பம் உதவும், மேலும் உற்பத்தி செலவுகளை குறைக்க நிறுவனங்களை அனுமதிக்கும் என்று LG அப்ளஸ் தெரிவித்துள்ளது. LG அப்லஸ் முதலில் IUICC தொழில்நுட்பத்தை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) தயாரிப்புகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, குறிப்பாக கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் வெளிப்புற ஆய்வு சாதனங்களுக்கு.

Trending News