ரேஷன் கார்டு மூலம் அரசின் இலவச ரேஷன் யோஜனா (Free Ration Yojana) திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இந்தச் செய்தியைப் படித்தவுடன் கட்டாயம் மகிழ்ச்சி அடைந்துவிடுவீர்கள். சமீபத்தில் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்துள்ளது. மறுபுறம், அரசின் முக்கியமான திட்டமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த முடிவின் தாக்கம் தற்போது மக்களிடையே தெரிகிறது.
உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்
மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பயனாளிகளுக்கு உரிய அளவு ரேஷன் கிடைப்பது அவசியமாகும். இதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல் (இபிஓஎஸ்) கருவிகளை இணைக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
மேலும் படிக்க | முகவரி ஆதாரம் இல்லாமலேயே குடும்ப உறுப்பினர்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்கலாம்!
எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்
இந்த விதி அமலுக்கு வந்த பிறகு, ரேஷன் எடையில் ஏற்படும் குளறுபடிகள் குறைய வாய்ப்புள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் (பி.டி.எஸ்) பயனாளிகளுக்கு எந்தச் சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காமல் இருக்க, ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைன் பயன்முறையிலும் வேலை செய்யும். மேலும் இந்தியாவில் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் குடும்பஅட்டை மூலம் ரேஷன்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்றால் என்ன
கொரோனா தொற்றுநோய் தாக்கத்தின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு , நாட்டின் வறுமைக் கோட்டிலுள்ள அல்லது வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்கும் நோக்கத்தோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் ஓரே நாடு ஒரே குடும்ப அட்டை (ONORC) என்ற இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது
மேலும் படிக்க | Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது! லட்சக்கணக்கானோர் ஜாலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ