LPG Price 1 June: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.135 குறைவு

LPG Price: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 135 ரூபாய் குறைப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 1, 2022, 07:10 AM IST
  • வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
  • மே மாதத்தில் சிலிண்டர் விலை இருமுறை உயர்த்தப்பட்டது
  • ஜூன் 1 முதல் புதிய விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும்
LPG Price 1 June: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.135 குறைவு title=

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் ரூ.135 குறைந்து ரூ.2219 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
இந்த நிலையில் எதிர்பார்த்ததுபோலவே, வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இதற்கிடையில் கடந்த மே மாதம் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டது. அதன்படி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை முதல் முறையாக மே 7 ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது, பின்னர் மே 19 ஆம் தேதி மீண்டும் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தில் சிலிண்டர் விலை இருமுறை உயர்த்தப்பட்டது
மே 7ம் தேதி, எல்பிஜி விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்ததால், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ வணிக சிலிண்டர் விலை சுமார் 10 ரூபாய் குறைந்தது. மறுபுறம் மே 19 அன்று அதன் விலை மீண்டும் ரூ.8 உயர்த்தப்பட்டது.

ஜூன் 1 முதல் புதிய விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும்
இந்த நிலையில் இன்று அதாவது ஜூன் 1ஆம் தேதி வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு நேரடியாக ரூ.135 வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது 19 கிலோ சிலிண்டர் டெல்லியில் 2354 க்கு பதிலாக 2219 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 2454 க்கு பதிலாக 2322 க்கும், மும்பையில் 2306 க்கு பதிலாக 2171.50 க்கும், சென்னையில் 2507 க்கு பதிலாக 2373 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, மே 31-க்குள் அறிவிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News