இரட்டை எண் தேதிகளில் திருமணம் செய்வது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

சீனாவில் அதிர்ஷ்டமானதாக கருதப்படும் எண் எட்டு, இந்தியாவில் துரதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 11:43 AM IST
  • திருமணத்தை 22.02.2022 இந்த தேதியில் செய்துகொள்ள விரும்புகிறார்கள்.
  • சீனாவில் 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில், சில அதிர்ஷ்ட நாளில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.
இரட்டை எண் தேதிகளில் திருமணம் செய்வது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? title=

பொதுவாகவே காதல் என்பது இரண்டு பேருக்கும் இடையில் மலர்வது, இருவர் சேர்ந்தால் தான் காதல் உருவாகும்.  பொதுவாக கிறிஸ்தவ பகுதிகளில், எண் இரண்டு "அன்பு மற்றும் இருவருக்குமான பாசம், திருமணங்கள் மற்றும் சமூக வாழ்க்கை" என்று கருதப்படுகிறது.  இதுகுறித்து ஜெர்மானிய அறிஞர் ஹென்ரிச் கொர்னேலியஸ் அக்ரிப்பா வான் நெட்டெஷெய்ம், 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் படைப்பான, த்ரீ புக்ஸ் ஆப் அக்கல்ட் பிலாசபி நூலில் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | குங்குமப்பூவில் கலப்படம் உள்ளதை அடையாளம் காண்பது எப்படி!

தற்போது  சில ஜோடிகள் அவர்களுக்குள் உள்ள உன்னதமான பந்தத்தை அவர்களது திருமணத்தை 22.02.2022 இந்த தேதியில் செய்துகொள்ள விரும்புகிறார்கள்.  ஜெர்மனியில், இரட்டைப்படை எண்ணை "ஸ்னப்சால்" அல்லது "லிக்கர் எண்" என்று குறிப்பிடுகிறார்கள்.  லிக்கர் எண் என்பதற்கு காரணம் என்னவென்றால் மது அருந்திவிட்டு வரும்போது பொருட்கள் இரட்டிப்பாக தெரியும் அதனால் தான் இதனை அவ்வாறு கூறுகின்றனர். பெர்லின் உளவியலாளர் மற்றும் எழுத்தாளரான வுல்ஃப்கேங் க்ரூகர் கூறுகையில் , "ஸ்னப்சால்" வலிமையைக் குறிக்கிறது, மக்கள் அதிர்ஷ்டத்தை பெரும் நோக்கில் இத்தகைய சில அதிசமயமான தினங்களில் திருமணம் செய்துகொள்ள எண்ணுகின்றனர்.  குறிப்பிட்ட இடம் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே அதிர்ஷ்டமாகக் கருதப்படும் எண்களைக் கொண்ட தேதியில் திருமணங்களை செய்ய விரும்புகின்றனர்.  சீனாவில் 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில், சில அதிர்ஷ்ட நாளில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.  

 

ஆகஸ்ட் 8, 2008 அன்று, 314,224 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்,  அதேபோல்  09.09.2009 அன்று பெய்ஜிங்கில் மட்டும் 15,000-க்கும் அதிகமானோர் திருமணம் செய்துகொண்டனர்.  உலகின் சில பகுதிகளில் எட்டு மற்றும் ஒன்பது ஆகிய எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.  ஒன்பது என்ற எண் "ஜியு" என்ற வார்த்தையைப் போலவே ஒலிக்கிறது, அதற்கு அர்த்தம் "நீண்ட காலம்" இதனால் இந்த தேதியில் திருமணம் செய்பவர்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது அர்த்தம்.  சீனாவில் எண் எட்டு ஆனது செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை குறிக்கிறது. இரட்டை எண்கள் அதிலும் குறிப்பாக குறிப்பாக எட்டுகள் மற்றும் ஒன்பதுகள், சீனாவில் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது,  "நல்ல விஷயங்கள் ஜோடியாக வரும்" என்று கூறப்படுகிறது.  இரட்டை எண்கள் நிலையானதாகவும் சமநிலையானதாகவும் கருதப்படுகின்றது.  இருப்பினும் சில இடங்களில் அதிர்ஷடமாகி கருதப்படும் சில எங்கள் சில இடங்களில் மாறுபடுகிறது.  உதாரணமாக சீனாவில் அதிர்ஷ்டமாக கருதப்படும் எண் எட்டு, இந்தியாவில் துரதிர்ஷ்டங்களின் எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவில் எண் நான்கு துரதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது, இது மரணம் என்கிற வார்த்தையை குறிப்பதாக கருதப்படுகிறது.

தாய்லாந்து மற்றும் வியட்நாமில் ஏழு என்பது துரதிர்ஷ்டவசமான எண்,  ஏழாவது மாதம் பேய்களின் மாதமாக கருதப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் யூத கலாச்சாரங்களில் ஏழு என்பது பெரும்பாலும் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது.  மேலும் சில இடங்களில் 13 என்பது துரதிர்ஷ்டங்களின் எண்ணிக்கையாக உள்ளது, 13 'ட்ரிஸ்கைடேகாபோபியா' எனப்படுகிறது.  இதன் காரணமாக சில விமான நிறுவனங்கள் தங்கள் விமானப் படையில் 13வது வரிசையை இல்லாமல் செய்கின்றன.  13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருமணம் செய்துகொண்ட மணமக்கள் சிறப்பாக வாழவில்லை. 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lightness in Lif

ஜெர்மனியில் பிப்ரவரி மிகவும் பிரபலமற்ற திருமண மாதம், சில விவரங்களின் அடிப்படையில்  2011 மற்றும் 2020-க்கு இடையில் சராசரியாக 3.5% திருமணங்கள் மட்டுமே நடந்துள்ளது.  பிப்ரவரி 22, 2022-ல் உள்ள எண்களின் வரிசைகள் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி எப்படி படித்தாலும் ஒரே மாரியாகத்தான் உள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  02.02.2020 மற்றும் 20.02.2020 ஆகிய தேதிகளில் அதிக திருமணங்கள் நடைபெற்றன.  பொதுவாக இரட்டை எண் தேதிகளில் நடந்த திருமணங்கள் 18% தோல்வியடையும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற தேதிகளை தேர்ந்தெடுக்கும் தம்பதிகள் வெளிப்புறத் தோற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்களாகவும், நெருக்கடிகளை சமாளிக்க முடியாதவர்களும் ஆவார்கள் என்றுஉளவியலாளர் வுல்ப்கேங் க்ரூகர் கருதுகிறார்.  இத்தகைய எண்கள் அதிர்ஷ்டமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த தேதிகளில் திருமணம் செய்துகொள்பவர்கள் எளிதில் தங்கள் திருமண நாளை மறந்துவிட மாட்டார்கள் என்பதே முக்கியமான ஒன்று.

மேலும் படிக்க | Happy Twosday 22-2-2022: இந்த தேதியில் இத்தனை விசேஷங்களா!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News