புதனின் அருளால் வேலை-வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெற இருக்கும் ராசிகள்

புதன் கிரகம்  வேலை, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் மற்றும் கல்வி ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் நிலையில், மார்ச் 6 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 6, 2022, 06:07 AM IST
  • வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்
  • வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்
  • உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும்.
புதனின் அருளால்  வேலை-வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெற இருக்கும் ராசிகள் title=

புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னியின் அதிபதி. புதன் கிரகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 6, ஞாயிற்றுக்கிழமை, புதன் கிரகம் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறது.

புதன் கிரகம்  மார்ச் 24 வரை இதில் நீடிப்பார். வேலை, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் மற்றும் கல்வி ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் நிலையில், மார்ச் 6 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்குள் நுழையும் நிலையில் புதனின் மாற்றம் எந்தெந்த ராசியை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: புதன் சஞ்சாரத்தின் போது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எழுதும் பணியில் வெற்றி பெறுவீர்கள். இழந்த பணம் திரும்பக் கிடைக்கும்.

ரிஷபம்: வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வங்கித் துறையுடன் தொடர்புடையவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மேலும் படிக்க | காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!!

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் குறிப்பாக நன்மை பயக்கும். சமயப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். ஆலோசகர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். இருப்பினும், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் பயனடையலாம்.

சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தக் காலத்தில் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்!

கன்னி: புதன் பெயர்ச்சியின் போது உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இதனுடன், கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, எந்த விதமான விவாதங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

துலாம்: இந்த பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். இந்த காலம் காதல் வாழ்க்கைக்கு நன்றாக இருக்கும். துணையுடன் உறவு வலுவாக இருக்கும்.

விருச்சிகம்: புதன் பெயர்ச்சியின் போது செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும், உடல்நலம் பற்றிய கவலைகள் இருக்கலாம். தந்தையின் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். மேலும், முன்னோர்களின் சொத்தில் பங்கு கிடைக்கலாம்.

தனுசு :  பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். மார்க்கெட்டிங், பத்திரிக்கை போன்ற துறைகளுடன் தொடர்புடையவர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது.

மகரம்: புதன் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். வீடு அல்லது சொத்தில் முதலீடு செய்வதற்கு நல்ல நேரம் இது. குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள்.

மேலும் படிக்க | Astrology: சுக்கிரன் பெயர்ச்சியினால் குபேரன் ஆகப் போகும் ‘3’ ராசிக்காரர்கள்..!!

கும்பம்: திருமணமானவர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாகும். பயணத்தின் போது, ​​உங்கள் மனைவியுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்: பெரிய நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், பயணத்தின் போது நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். பெயர்ச்சி காலத்தில் தேவைக்கு அதிகமாக செலவுகள் கூடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்!

Trending News