மெக்ஸிகோ நகரில், 'அவெனிடா இஸ்டாக்ல்கோ -9' (Avenida Iztacalco 9) என்ற முகவரியுடன் கூடிய வீடு இந்த நாட்களில் Google Map-ல் வெகுவாகத் தேடப்படுகிறது. இது விவாதத்தில் இருப்பதற்கான காரணம் என்னவென்றால், இந்த வீட்டின் சுவர்கள், முகப்பு மற்றும் வாயில் விசித்திரமான பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் காரணமாக, இந்த வீடு மிகவும் பயங்கரமாகத் தோற்றமளிக்கிறது. திகில் காரணமாக, அப்பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் இந்த வீட்டின் முன் செல்வதைத் தவிர்க்கிறார்கள்.
பெர்னாண்டோ மாதா என்பவர் தனது சமூக ஊடக இடுகையில், 'பூமியில் அற்புதம்' என்ற பிரிவில் இந்த வீட்டின் வீடியோவைப் பகிர்ந்தபோது இந்த வீடு விவாதத்திற்கு வந்தது. அப்போதிருந்து, இந்த வீட்டின் படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக வேகமாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
விசித்திரமான விஷயங்களைப் பார்ப்பது பெர்னாண்டோவுக்கு மிகவும் பிடிக்கும். பெர்னாண்டோ தனது சோஷியல் மீடியா அகௌண்டில் விசித்திரமான விஷயங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். வித்தியாசமான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதையும் கண்டுபிடிப்பதையும் அவர் விரும்புகிறார். பெர்னாண்டோ, அவெனிடா இஸ்டாக்ல்கோ -9 என்ற முகவரியில் ஒரு வினோதமான வீடு இருப்பதாக தனது வீடியோவில் கூறினார். பல உடைந்த மற்றும் பழைய பொம்மைகள் இந்த கட்டிடத்தில் தொங்குகின்றன.
இந்த வீடு மெக்சிகோவின் புகழ்பெற்ற 'டால்ஸ் தீவுகள்' (Dolls Island) வரிசையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு பேய்கள் நிறைந்த மோசமான தீவாகக் கருதப்படுகிறது. இந்த தீவில் ஆவிகள் அலைகின்றன என்று மக்கள் நம்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த தீவைப் போல தங்கள் வீட்டை யார் அலங்கரிக்க விரும்புகள் என்று மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். உண்மையில், இந்த முகவரி ஒரு சிறிய கடையின் ரகசிய முகவரியாகும். இது பில்லி சூனியம் தொடர்பான பொருட்களை விற்கும், அந்த வேலைகளுக்கு உதவும் கடை என்றும் கூறப்படுகிறது.
மெக்ஸிகன் ஊடகங்களின்படி, அவெனிடா இஸ்டெக்லோ-9 சமூக ஊடகங்களிலும் முன்னரும் வைரலாகி உள்ளது. ஆனால் லாக்டௌனில் மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடந்த நேரத்தில், பொழுதைக் கழிக்க இந்த வீட்டை Google Map-ல் வெகுவாக சர்ச் செய்யத் தொடங்கினார்கள்.
ALSO READ: மானத்தை விட லேப்டாப் தான் முக்கியம்.. நிர்வாணமாக பன்றியை துரத்தி ஓடிய தாத்தா..!