வடஇந்தியாவில் தென்மேற்கு பருவமழை அடைந்த நிலையில் அடுத்த 24-48 மணி நேரத்திற்குள் டெல்லியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில தினங்களாக மும்பையில் மழை வெளுத்து வாங்கிய பெய்து வருகிறது.
இந்த நிலையில் பருவமழை துவங்கி உள்ள நிலையில் இன்று முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் மழை பெய்யும். இதேபோல் ஒடிஸா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட, மகாராஷ்டிரம், குஜராத் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பலத்த மழை பெய்யும்.
மேலும் ஹரியாணா, சண்டீகர், டெல்லி, கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் பஞ்சாபிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.