அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. எஸ்பிஐயின் ஆய்வு அறிக்கையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு உட்கட்டமைப்பிற்கு டொனால்ட் டிரம்ப் முன்னுரிமை கொடுப்பார் என்பதால், நிதி வரம்புகள் கூடி கடனுக்கான தேவைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடந்த ஜூலையில் இருந்த அளவிற்கு டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகித குறைக்க எடுத்த முடிவே இதற்கு காரணம் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலரின் வலிமையை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடு 0.09 சதவீதம் அதிகரித்து 105.63 ஆக இருந்தது. கூடுதலாக, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.25 சதவிகிதம் சிறிய சரிவைக் கண்டது. ஒரு பீப்பாய்க்கு 71.65 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையின் தலைப்பு 'அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டிரம்ப் 2.0 இந்தியா மற்றும் உலகப் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்' என்பதாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சில காலம் குறையலாம் என்றாலும், அதன் பிறகு உள்ளூர் கரன்சி வலுவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் இந்தியாவிற்கு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என இரண்டும் இருந்தாலும், சந்தைகள் மற்றும் குறிப்பிட்ட சில துறைகள் ஊக்கம் பெற்றுள்ளன என்று எஸ்பிஐ அறிக்கை கூறியுள்ளது. H-1B விசா கட்டுப்பாடுகள் மற்றும் வலுவான டாலர் ஆகியவை குறுகிய காலத்தில் ரூபாயில் மதிப்பில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா தனது உற்பத்தியை விரிவுபடுத்தவும், ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்தவும், பொருளாதாரத் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
கடந்த காலத்தில், ரூபாய் மதிப்பை நிலைப்படுத்தும் முயற்சியாக, அந்நியச் செலாவணிச் சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டது. அதைப் போலவே, இப்போதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைய்மானால், இம்முறையும் இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ