சுக்கிரன் ராசி மாற்றம்: எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் இவைதான்!

Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றத்தால், கஷ்டங்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள்... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2022, 08:24 AM IST
  • பணியிடத்தில் கவனமாக இருக்கவும்
  • ஆரோக்கியத்தில் கவனம் காட்டவும்
  • வியாபாரத்தில் சுணக்கம் ஏற்படும்
சுக்கிரன் ராசி மாற்றம்: எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் இவைதான்! title=

நவக்கிரகங்களில் சுபக் கிரகமாக அறியப்படும் சுக்கிரன் மார்ச் 31, 2022 அன்று கும்ப ராசியில் பிரவேசிக்கிறார்.. டிசம்பர் 8 முதல், மகர ராசியில் இருந்த சுக்கிரன், தற்போது கும்ப ராசியில் பிரவேசித்து ஏப்ரல் 27-ஆம் தேதி வரை அங்கிருந்து ஆட்சி செய்வார்.  

சுக்கிரனின் ராசி மாற்றத்தால், சில ராசிகளுக்கு சாதகமாக இருந்தாலும், சில ராசிகள் குறிப்பிடத்தக்க கஷ்டங்களை சந்திக்கலாம்.

உறவுகள், பணம், செல்வாக்கு  மகிழ்ச்சி என அனைத்து அம்சங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் சுக்கிரனின் சுக்ரினின் ராசி மாற்றத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள்.

சுக்கிரனின் ராசி மாற்றம் சில குறிப்பிட்ட ராசிகளில் ஏற்படுத்தும் சுணக்கமான மாற்றத்தை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்... 

மேலும் படிக்க | குரு உதயம், இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும் 

மிதுனம்: பொறுமை குறையும், தொழிலிலும் வேலையிலும் சிரமங்கள் ஏற்படலாம். உங்களின் (Gemini) உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏப்ரக்ல் 27 வரை கவனமாக இருந்தால் போதும்.

கடகம்: தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும். கோபத்தால் சாதிக்கப்போவது ஏதுமில்லை என்பதை அறிந்துக் கொண்டால் நிம்மதி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்பட்டாலும், உத்யோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம்..

மீனம்: வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம். மனம் சஞ்சலமாக இருக்கும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.  

மேலும் படிக்க | இந்த ராசிக்காரங்ககிட்ட ரகசியத்த சொல்லாதீங்க

மகரம்: தன்னம்பிக்கை குறையலாம் என்பதால் தெய்வ வழிபாடை தொடரவும். மனம் கலங்கும் நிலை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

சிம்மம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாலும், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காதல் உறவில் ஏமாற்றம் ஏற்படலாம். சுக்கிரன் அன்புக்கும் காதலுக்கும் அதிபதி என்பதால், ஏப்ரல் 27 வரை பொறுமையாக இருக்கவும். உத்தியோகத்தில் கூடுதல் சுமை ஏற்படலாம்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணிகள் துரிதமாக நடைபெறும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News