ராகுவின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்கட்டான நிலை: எச்சரிக்கை தேவை

Rahu Transit: ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2022, 06:47 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • இந்த நேரத்தில் கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.
  • தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
ராகுவின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்கட்டான நிலை: எச்சரிக்கை தேவை title=

ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது. ராகு மாயையின் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. மீண்டும் ராகு ராசி மாற்றத்திற்கு தயாராகிவிட்டார். ராகுவின் ராசி 2022 ஏப்ரல் 12 அன்று மாறவுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை உள்ளவர்களுக்கு ராகுவின் ராசி மாற்றத்தின் தாக்கம் இருக்கும். 

ராகுவின் ராசி மாற்றம் 2022:

இந்து நாட்காட்டியின்படி, ராகு ஏப்ரல் 12, 2022 அன்று ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். ராகு எப்போதும் பிற்போக்கு நிலையில் நகரும் கிரகமாகும். ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்:

மேஷ ராசியில் ராகுவின் வருகை பாதகமான பலனைத் தரும். மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். தவறான செயல்களை செய்வதில் இருந்து உங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பண விரயம் இருக்கலாம். 

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்கார பெண்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் - பணமழை நிச்சயம்

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசியில் கேது அமர்ந்திருப்பதால் திடீர் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சிறிய விஷயங்களை பெறக்கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மகரம்:
ராகுவின் ராசி மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு வேதனையான காலமாக இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் தடைகள் ஏற்படக்கூடும்.

தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனால் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். எதிரிகளை வெல்ல அது மிகவும் அவசியமாகும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி, செவ்வாய் ராசி மாற்றம்: இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News