ஓவிய கலைஞராய் மாற்றிய தல தோனி; வைரலாகும் வீடியோ: WATCH

இணையத்தை கலக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனியின் புதுவித ஓவியத்தின் தொகுப்புகள்!!  

Last Updated : May 20, 2019, 02:43 PM IST
ஓவிய கலைஞராய் மாற்றிய தல தோனி; வைரலாகும் வீடியோ: WATCH title=

இணையத்தை கலக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனியின் புதுவித ஓவியத்தின் தொகுப்புகள்!!  

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனி காலத்திலும், களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம். இவருக்கு இந்தியாவில் மட்டும் அல்ல; உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது பலராலும் மறுக்கமுடியாத உண்மை. இவர் இணையதளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். இந்நிலையில், இணையதளத்தில்  தல தோனி அவர்களின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில், எனக்கு கிரிக்கெட் பிடித்திருந்தாலும் எனக்கு ஓவியம் வரைவதிலும் விருப்பம் உண்டு என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் நான் சில ஓவியங்களை வரைந்துள்ளேன். என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை விரைவில் நடத்த உள்ளதாகவும், அதற்கு இன்னும் சில காலம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், ஓவியம் தெரிந்தவர்கள் எனது ஓவியத்தை பார்த்து அறிவுரைகளை கூறுங்கள். நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தோனி வரைந்த சில ஓவியங்களையும் காண்பித்து அது குறித்து நினைவுகளை பகிர்ந்துள்ளார். தோனியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட்டை போல ஓவியத்திலும் தல வெளுத்து வாங்குவார் என ரசிகர் பலரும் பதிவிட்டு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

 

Trending News