நிர்வாணமாக சென்று குற்றவாளியை மடக்கி பிடித்த பெண் போலீஸ்!!

சுவீடனில் உள்ள ஒரு பெண் போலீஸ் அதிகாரி நிர்வாணமாக சென்று திருடனை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!

Updated: Apr 5, 2019, 07:26 PM IST
நிர்வாணமாக சென்று குற்றவாளியை மடக்கி பிடித்த பெண் போலீஸ்!!

சுவீடனில் உள்ள ஒரு பெண் போலீஸ் அதிகாரி நிர்வாணமாக சென்று திருடனை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!

தற்போதைய காலகட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து, காவல்துறையினரும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு பல்வேறு நூதனமான முறைகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஒரு பெண் காவல் அதிகாரி குற்றவாளியை நிர்வாணமாக சென்று நூதனமாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுவீடனை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் நீராவி குளியல் செய்வதற்காக நிர்வாணமாக நீராவி பாத்ரூமிற்கு சென்றுள்ளார். இது போன்ற நிர்வாண நீராவி குளியல் அந்த நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். 

இந்நிலையில், நீராவி குளியல் பாத்ரூமிற்குள் சென்ற போது அங்கு தேடப்பட்டு வந்த குற்றவாளி இருப்பதை அந்த பெண் காவல்  அதிகாரி பார்த்துள்ளார். இதையடுத்து, பதட்டப்படாமல், அவர் மெதுவாக அந்த தேடப்படும் குற்றவாளியின் அருகில் சென்று தான் ஒரு போலீஸ் என்றும், அவரை தற்போது கைது செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். 

இதை கேட்ட அந்த குற்றவாளி வேறு வழியில் தப்பிசெல்ல முயன்றுள்ளார். ஆனாலும் அவரது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து, நிர்வாணமாக சென்று ஒரு பெண் போலீஸ் அதிகாரி தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்த செய்தி வைரலாக பரவியது. சமூகவலைதளங்களில் அந்த பெண் போலீஸ் அதிகாரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.