இந்திய இரயில்வேயின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ரயில் மோதி இறந்தவர்களின் எண்ணிக்கை 49,790 ஆகும்.
பஞ்சாப்பில் மாநிலம் அமிர்தரசரசில் கடந்த வெள்ளிகிழமை இரவு (19-10-2018) தசரா கொண்டாட்டத்தை காண தண்டவாளத்தில் மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு ரயில்கள், அங்கிருந்த கூட்டத்தினர் மீது மோதியது. இந்த விபத்தில் 61 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.
இதனையடுத்து இந்திய இரயில்வே துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்ப்பட்ட விபத்துக்களை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ரயில் மோதி இறந்தவர்களின் எண்ணிக்கை 49,790 என கூறப்பட்டு உள்ளது.
அதில் அதிகப்படியனா விபத்து வடக்கு ரெயில்வே மண்டலத்தில் நிகழ்ந்துள்ளது. வடக்கு ரெயில்வே மண்டலத்தில் 7,908 பேர் இறந்துள்ளனர். தெற்கு ரெயில்வே மண்டலத்திலிருந்து 6,149 பேரும், கிழக்கு ரயில்வே மண்டலத்திலிருந்து 5,670 பேர் இறந்துள்ளனர்.
இந்தியன் இரயில்வே போலிஸ் விபத்துக்குறித்த தகவல்களை மண்டல வாரியாக அளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.