IND vs AUS: 3வது டெஸ்டில் இந்தியா தோற்றால்? இந்த சிக்கல்களை சந்திக்க நேரிடும்!

India vs Australia 3rd Test Match: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. டிராவிற்காக விளையாடி வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Dec 17, 2024, 06:30 AM IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபாலோ-ஆன்?
  • 3வது டெஸ்டிலும் திணறும் இந்திய அணி!
  • இந்தியாவின் WTC பைனல் வாய்ப்பு என்னவாகும்?
IND vs AUS: 3வது டெஸ்டில் இந்தியா தோற்றால்? இந்த சிக்கல்களை சந்திக்க நேரிடும்! title=

கப்பாவில் நடைபெற்று வரும் 3வது டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. வானிலை நிலவரமம் இந்திய அணிக்கு ஆதரவாக இல்லை. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் இறங்கிய இந்தியாவின் டாப் ஆர்டர் சரிவை சந்தித்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த அவுட் ஆகி வெளியேறினர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 246 ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட் ஆனால் பாலோ-ஆனை சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பாலோ ஆனை சந்திக்கிறது.

மேலும் படிக்க | உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை வருகை..வெற்றி வாகையுடன் உற்சாக வரவேற்பு!

இதற்கு இடையில் வானிலையும் மிகவும் மோசமாக உள்ளது. அடிக்கடி குறிப்பிடும் மழையால் போட்டி தடைப்பட்டு வீரர்களுக்கு தொந்தரவாக உள்ளது. நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியா சற்று நிதானமாக பேட்டிங் ஆடும் பட்சத்தில் டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு வெற்றி தான் தேவை. ஆனால் நடப்பவை இந்தியாவிற்கு சாதகமாக இல்லை. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இந்தியா WTC புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. ஆனால் அடிலெய்டில் ஏற்பட்ட தோல்வி மற்றும் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் சொந்த மண் வெற்றி இந்தியாவை 3வது இடத்திற்கு தள்ளியது.

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடையும் பட்சத்தில் மூன்றாவது முறையாக WTC இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்தியா இழக்க நேரிடும். மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறும் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அதிகபட்சமாக 58.8 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதே சமயம் WTC புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் பட்சத்தில் 60.5 சதவீதத்துடன் இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பை தக்க வைத்து கொள்ளும். பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவு 3-2 என்று இருந்தாலும் இந்தியாவிற்கு சாதகமாக இருக்காது. எனவே, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்குத் தகுதி பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணியும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற வேண்டும்.

அடுத்த மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி டிரா ஆனாலும் ஆஸ்திரேலியா அணியால் 57 சதவீதத்தை தாண்ட முடியாது, இது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். பிரிஸ்பேனில் 4வது மற்றும் 5வது நாளில் வானிலை மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆகும் பட்சத்தில், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். கடைசி 2 போட்டியில் தோற்றால் அல்லது தொடர் 2-2 என சம நிலையில் இருந்தால், WTC பைனல் வாய்ப்பு இந்தியா கையில் இல்லை. எனவே 3வது டெஸ்ட் போட்டி அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | இந்த 4 சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடர் தான் கடைசி! இனி வாய்ப்பு கிடைக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News