உலகில் உள்ள அதிசயங்கள் அத்தனையும் இயற்கையின் கலைநயத்தால் கண்களுக்கு விருந்தாகவும், காட்சிகளுக்கு கனவாகவும், மகிழ்ச்சிக்கு மருந்தாகவும் என மாறுபட்ட பரினாமங்களில் மனிதர்களை தனக்கு கீழே மண்டியிட வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்கலில் இயற்கையின் சில அழகியலை பார்த்து இது எப்படி சாத்தியம் என விழிகளை பிளந்து பார்த்ததும் உண்டு. அப்படி ஒரு அழகான அதியம் என்னை அதனுள் சுண்டி இழுத்தது. நேற்று பெய்த மழையில் முளைத்த காளாண் நீ என கோவத்தில் சிலர் சிலரை திட்டுவதற்காக பயன்படுத்துவார்கள்.
மேலும் படிக்க | இது செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்
அதேபோல.., மழை பெய்யும்போது வெட்டும் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்தார்கள் என கேட்டிருப்போம். ஆனால் இங்கு மின்னல் தாக்கி ஒரு பூ பூக்கிறது. மூக்கை துளைக்கும் நறுமனம் கொண்ட தாழம்பூ மின்னல் வெட்டும்போது பூக்கிறது என குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது. சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல என்ற அந்த வரிகளை நாடோடி மன்னன் படத்தில் வரும் ஒரு பாடலில் கவிஞர் சுரதாவும் குறிப்பிட்டிருப்பார். அது எப்படி மின்னல் கண்டு தாழை மலர்கிறது என்ற கேள்வி எழவே.. அறிவியல் ரீதியாக அதற்கு தெளிவு பெற வேண்டும்.
சாதாரணமாக நாம் பார்த்திருப்போம்.., விவசாய நிலங்களில் இருக்கும் பயிற்கள் தண்ணீர் பாய்ச்சி வளர்வதற்கும் மழை பொழிந்து வளர்ந்து நிர்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை. மழை பெய்த அடுத்த நாள் பார்த்தோம் என்றால் தாவரங்கள் அனைத்தும் செழிப்புடன் பசுமையாக காட்சியளிக்கும். அதற்கு என்ன காரணம்.? அதேபோல தாழம் பூவும் மின்னல் வெட்டி மழை பெய்த அடுத்த நாள் பூத்திருக்கும் அதற்கு காரணம் என்ன..? அதாவது கற்று மண்டலத்தின் மேல் பரப்பில் உள்ள நைட்ரஜனை துளைத்துக்கொண்டு பூமிக்கு வரும் மின்னலும் மழையும் தாவரங்களுக்கு அதிகப்படியான நைட்ரஜனை கொடுக்கிறது. இதை முழுமையாக உட்கொள்ளும் தாழம்பூ தன்னை செழிப்புற செய்து விடியும்போது பூத்து நிற்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.., இந்த அறிவியல் ரீதியான சிந்தனை குறுந்தொகையிலும் இடம் பெற்றுள்ளதே என்பதுதான்.
மேலும் படிக்க | Europaவில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொடுக்கும் ஆச்சரியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR