குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாமா? 5 நன்மைகள் கிடைக்கும்

Honey | குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடும்போது செரிமான பிரச்சனை உள்ளிட்ட 5 பிரச்சனைகள் நிவாரணம் கிடைக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 1, 2025, 04:59 PM IST
  • தேன் சாப்பிடுவதால் நன்மைகள்
  • குளிர்காலத்தில் ஒரு ஸ்பூன் சாப்பிடவும்
  • 5 முக்கிய பிரச்சனைகள் நிவாரணம் பெறும்
குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாமா? 5 நன்மைகள் கிடைக்கும் title=

Honey Benefits Tamil | தேன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையானது. இதை சாப்பிடுவதும் குடிப்பதும் பல நன்மைகள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் தேன் பல நோய்களில் இருந்து உங்களை என்றென்றும் காக்கும். இது இயற்கையாக கிடைக்கக்கூடியது. அத்தகைய தேனில் ஆயிரக்கணக்கான நன்மைகள் உள்ளன. எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையிலான நன்மைகள் இந்த தேனில் இருக்கிறது. தேனை சருமத்தில் தடவுவதால் முகம் பொலிவு பெறும் என்பது உள்ளிட்ட பல நன்மைகள் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காலையில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் குடிப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் நச்சுத்தன்மை வெளியேற்றம்

வெதுவெதுப்பான நீரில் தேன் குடிப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. அதாவது, உடலுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியே கொண்டு வருவதில் தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கொடுக்கும். இதனுடன், உங்கள் முகத்தில் பொலிவு அதிகரிக்கும். முக பருக்களில் இருந்து உங்களுக்கு முழுமையான நிவாரணம் அளிக்கிறது.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வெறும் 3 வாரங்களில் குறைக்க உதவும் எளிய டிப்ஸ்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

செரிமானத்தை மேம்படுத்துகிறது

ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், செரிமானம் மேம்படும். இதனால், உங்கள் செரிமான அமைப்பும் சிறப்பாக செயல்படும். மேலும், உணவு விரைவில் செரிமானம் ஆவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் முழுமையாக நிவாரணம் பெற்றுவிடுவீர்கள். தேனில் உள்ள நொதிகள் உணவை சிறப்பாகவும் விரைவாகவும் செரிக்க உதவியாக இருக்கும்.

தொண்டை நோய் தொற்று

குளிர்காலம் வந்தவுடன் தொண்டையில் நோய்த்தொற்று வர அதிக வாய்ப்புள்ளது. இதற்காக பலர் டாக்டரிடம் சென்று விலை உயர்ந்த மருந்துகளை வாங்குவார்கள். ஆனால் மருந்துகள் ஓரளவிற்கு நன்மை பயக்கும்,  நோய்த்தொற்றை முற்றிலுமாக அகற்றத் தவறிவிடுகின்றன. தினமும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டை தொற்று முற்றிலும் குணமாகும். இதனுடன், இருமல் மற்றும் சளி பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பலர் குளிர்காலத்தில் குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையுடன் போராடுகிறார்கள். ஆனால் தேன் குடிப்பதை நீங்கள் பின்பற்றினால், பிபி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தேனில் உள்ள என்சைம்கள் உங்கள் BPயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த வழிகளை முயற்சி செய்து பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News