தீபாவளிக்கு பட்டாசுகளை எப்போது வெடிக்கலாம்: SC ஹைலைட்ஸ்....

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிபந்தனைகள் என்ன? -முழு விவரம்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2018, 03:09 PM IST
தீபாவளிக்கு பட்டாசுகளை எப்போது வெடிக்கலாம்: SC ஹைலைட்ஸ்.... title=

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிபந்தனைகள் என்ன? -முழு விவரம்....

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.

பட்டாசு தயாரிப்புக்கு புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த நிலையில் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 

பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கோரிக்கைகள்:- 

> தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். 

> கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரை முக்கால் மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். 

> அதிக சத்தம், அதிக புகை வரும் பட்டாசுகளை தயாரிக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை விற்க கூடாது. உரிமம் இல்லாதவர்கள் பட்டாசு விற்பனை செய்ய கூடாது.

> பட்டாசு விவகாரத்தில் விதிமுறைகளை மீறுவோர் மீது அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவ்விவகாரம் பற்றி ஒரு வார காலத்திற்குள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

> குறிப்பிட்ட அளவிலான சத்தத்தை ஏற்படுத்த கூடிய வகையிலான பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதி. 

> பாசு வெடிப்பதற்கான இடங்களை அரசு மட்டுமே தேர்வு செய்யும். 

டெல்லிக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பட்டாசு தடையையும் நீதிபதிகள் நீக்கியுள்ளனர். உச்ச நீதிமன்றம் விதித்த இந்த கட்டுப்பாடுகள் திருமணங்கள், விழா காலங்கள் என எல்லாவற்றுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News