காரில் முகமூடி அணியாததற்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதால் 10 லட்சம் இழப்பீடு கோரிய நபர்

தனது சொந்த காரில் தனியாக வாகனம் ஓட்டி செல்லும்போது முகமூடி அணியாததற்காக ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து ரூ .10 லட்சம் இழப்பீடு கோரி சவுரப் சர்மா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2020, 10:00 PM IST
காரில் முகமூடி அணியாததற்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதால் 10 லட்சம் இழப்பீடு கோரிய நபர் title=

New Delhi: தனது சொந்த காரில் தனியாக வாகனம் ஓட்டி செல்லும்போது முகமூடி அணியாததற்காக ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து ரூ .10 லட்சம் இழப்பீடு கோரி சவுரப் சர்மா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முகமூடிகளை (Face Mask) அணிந்துகொள்வதும் சமூக தூரத்தை பராமரிப்பதும் அவசியம். பொது வெளியில் முகமூடி அணியாததற்காக மக்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல ஒரு வழக்கு டெல்லியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஒரு நபர் முகமூடி அணியாமல் காரில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். முகமூடி அணியாததைக் கண்ட காவல்துறையினர் அவரைத்தடுத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அபராதத் தொகையை கோரியது மட்டுமல்லாமல், ரூ .10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

நடந்தது என்ன?
அந்த அறிக்கையின்படி, டெல்லியைச் சேர்ந்த சவுரப் சர்மா (Saurabh Sharma) தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர். செப்டம்பர் 9 ஆம் தேதி அவர் தனது காரில் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் முகமூடி அணியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், கீதா காலனி அருகே காவல்துறையினர் (Delhi Police) அவரைத் தடுத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். ஒரு காரில் தனியாக பயணம் செய்யும் போது முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் காவல்துறையினர் அவரின் பேச்சைக் கேட்காமல் அபராதம் விதித்தனர். 

ALSO READ  |

AC போடாத வங்கிக்கு 20,000 ரூபாய் அபராதம்: கஸ்டமரா கொக்கா?

வாடிக்கையாளரிடமிருந்து கேரி பேக்-காக ரூ.18 வசூல் செய்த பிக் பஜாருக்கு ரூ.11,500 அபராதம்

தயிருக்கு GST வசூலித்த உணவகத்திற்கு ₹ 15 ஆயிரம் அபராதம்..!

இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் (Delhi High Court) ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அபராதத் தொகையுடன் சேர்த்து தன்னை சித்திரவதைக்கு உள்ளாக்கிய பொது அதிகாரிகளிடமிருந்து இழப்பீடாக ரூ .1 மில்லியன் கோரியுள்ளார். மேலும் மனுவில், கார் தனது தனிப்பட்ட பகுதி என்றும், எனவே தனியாக பயணம் செய்யும் போது முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை, பொது இடத்தில் முகமூடி அணிவதை காரில் தனியாக பயணம் செய்வதுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News