ஐகோர்ட்டுகளில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகளா?

நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டுகளில் வெறும் 9% பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Last Updated : Nov 10, 2018, 10:51 AM IST
ஐகோர்ட்டுகளில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகளா? title=

நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டுகளில் வெறும் 9% பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2017ம் ஆண்டில் இந்திய நீதித்துறையின் பொற்காலம் என போற்றும் வகையில் நாட்டின் முக்கிய 4 ஐகோர்ட்டுகளுக்கு பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். 

நீதிபதிகள் மஞ்சுளா செலூர் மும்பை ஐகோர்ட்டிற்கும், ஜி.ரோகினி டில்லி ஐகோர்ட்டிற்கும், நிஹிதா நிர்மலா மத்ரே கோல்கட்டா ஐகோர்ட்டிற்கும், இந்திரா பானர்ஜி சென்னை ஐகோர்ட்டிற்கும் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் 2017 ஏப்ரல் 13ம் தேதி நீதிபதி ரோகினியும், செப்டம்பர் 19ம் தேதி மத்ரேவும், டிசம்பர் 4ம் தேதி செலூரும் பணி ஓய்வுபெற்றனர். மேலும் இந்திரா பானர்ஜி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

சென்னை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தஹில்ரமணியும், ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதியாக கீதா மிட்டல் என்ற பெண்மணியும் பதவி வகித்து வருகின்றனர்.

தற்போது ஐகோர்ட்டுகளில் 9% மட்டுமே பெண் நீதிபதிகள் இருக்கின்றன. மொத்தமுள்ள 24 ஐகோர்ட்டுகளில் 1,221 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 891 நீதிபதிகள் மட்டுமே இருக்கின்றனர். 

கடந்த ஓராண்டில் 20க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் விரைவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். சுப்ரீம் கோர்ட்டில் 68 ஆண்டுகால வரலாற்றில் வெறும் 8 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்துள்ளனர். அவர்களில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகிய 3 பேரும் தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருக்கின்றனர். மீண்டும் ஒரு நீதித்துறை பொற்காலத்திற்கு, இன்னும் 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

Trending News