பறை-க்கு கிடைத்த அங்கீகாரம் ஏன் பறை தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பதில்லை?

இறந்த கன்றுக்குட்டியின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் பறை என்ற இசைகருவி பெரும்பாலும் அனைத்து தாள வாத்தியங்களுக்கும் தாய் என்று புகழப்படுகிறது. 

Written by - Mukesh M | Last Updated : Mar 1, 2020, 01:35 PM IST
பறை-க்கு கிடைத்த அங்கீகாரம் ஏன் பறை தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பதில்லை? title=

இறந்த கன்றுக்குட்டியின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் பறை என்ற இசைகருவி பெரும்பாலும் அனைத்து தாள வாத்தியங்களுக்கும் தாய் என்று புகழப்படுகிறது. 

தற்போது இறுதிச் சடங்குகளுடன் மட்டுமே தொடர்புபடுத்தப்படும் இந்த இசை கருவி இப்போது கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களுக்குள் நுழைய துவங்கியுள்ளது. மேலும் அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளது. ஆனால், பறை அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றாலும், அதன் தயாரிப்பாளர்கள் தாழ்த்தப்பட்டவர் என்ற அடையாளத்தில் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள்.

"எனது குடும்பம் இப்போது 50 ஆண்டுகளாக பறையினை உருவாக்கி வருகிறது. திருமண விழாக்கள் மற்றும் மரணங்கள் உட்பட பல நிகழ்வுகளில் நாங்கள் பறை இசைக்கிறோம். நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் சிலர் இதை கேவலமான வேலையாக பார்க்கிறார்கள். இதற்கு காரணம் நாங்கள் பசுவின் தோலை பயன்படுத்துவது" என்கிறார்" தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பறை இசை கருவி தயாரிப்பாளர்.

"எனது சொந்த கிராமத்திலுள்ள மக்கள் இதை பாகுபாடற்ற முறையில் பார்க்கிறார்கள். ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து தோலைப் பெறுகிறோம், அதை விரித்து பறை தயாரிக்கிறோம். நாங்கள் அதை மற்ற நாடுகளிலும் மாநிலங்களிலும் விற்கிறோம் மற்றும் இசைக்கிறோம். அங்கும் எங்களுக்கு பாகுபாடு இல்லை, ஆனால்..." என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

புத்தர் கலை குழுவின் நிறுவனர் மற்றும் கலைசுடர்மணி விருதைப் பெற்ற மணிமாரன் போன்ற அனுபவமுள்ள கலைஞர்கள் கூட, சமூகத்திற்கு இன்னும் சம வாய்ப்புகள் கிடைக்காமல் ஒதுக்கப்படுகின்றனர் எனவும் இந்த கலைஞர் தனது வேதனையினை பதிவு செய்கிறார்.

பறை உலகளவில் அங்கீகாரம் பெற்றதில் மகிழ்ச்சி. ஆனால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்களா என்று நீங்கள் கேட்டால், ஏமாற்றத்தின் உணர்வு இருக்கிறது. ஒரு பறையை தயாரிக்க, நீங்கள் ஒரு இறந்த பசுவைத் தோலுரிக்க வேண்டும், அந்த தோலை பக்குவப்படுத்தி நீண்ட செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இசைக்கருவி தயாரிக்கப்படும் வரை, ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே இதில் ஈடுபட வேண்டும் என்று பிறர் விரும்புகிறார்கள். ஆனால் அது தயாரானதும், அதை உருவாக்கும் சமூகம் அல்லது அசல் பயனர்களுக்கு சர்வதேச தளங்களில் அதை இசைப்பதற்கான விருதுகள் அல்லது வாய்ப்புகள் கிடைக்காது. இது சமூக நீதியாக இருக்க முடியுமா?

பிற சமூகங்களிலிருந்து பறை எடுப்பவர்கள் கூட, கருவியைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சாரா ஒரு நபர் விவரிக்கையில்., "நான் முதன்முதலில் பறை வாங்கி எனது வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது, ​​என் தந்தை அதை சாலையில் வீசி எறிந்தார். நான், ஏன் நாம் இந்த இசைக்கருவியை இசைக்க கூடாது என்று கேள்வி கேட்கையில் எனக்கு பதில் கிடைக்கவில்லை, மாறாய் வீட்டை விட்டு தான் வெளியேற்றப்பட்டேன்" என குறிப்பிடுகின்றார். 

"நான் உண்மையில் ஒரு ஆட்டோ டிரைவர். இதை நான் ஒரு பகுதிநேர வேலையாகக் கற்றுக்கொள்ள விரும்பினேன், ஏனென்றால் நான் அதைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு சிறந்த கலை என்று யாருக்கும் தெரியாது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த கலைஞர்கள் ஆதிக்க சாதியின் பார்வையில் கருவியின் நிலை மற்றும் அதன் தயாரிப்பாளர்களை மேம்படுத்த போராடுகையில், இவரது போராட்டத்திற்கான அங்கிகாரம் இவரது குடும்பத்தில் இருந்தே மறுக்கப்படுகிறது என்பதே இன்றைய கால எதார்த்த உண்மை.

சற்று யோசித்துப்பாருங்கள், பறை மற்றும் தாய்த்தப்பட்டோர் இடையே எந்த தொடர்பும் இல்லை, விலங்குகளின் சடலங்களை அகற்றுவது போன்ற பிற மோசமான வேலைகளைப் போலவே ஆதிக்க சாதியினரால் அது அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மரியாதைக்குரிய வேலைகளைப் படிப்பதற்கும் எடுத்துக்கொள்வதற்கும் பதிலாக, பறை இளைஞர்களை வெளியேற்றும்படி கட்டாயப்படுத்துகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும்.

Trending News