ஜன.,1 ‘இந்த’ விஷயங்களை பாத்தீங்களா? அப்போ 2025 லக்கியான வருடம்தான்!

Lucky Signs On January 1st 2025 : 2025ஆம் அண்டு பிறந்து விட்டது. இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை, நாம் பார்த்த விஷயங்களை வைத்து கண்டு கொள்ளலாம். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 2, 2025, 02:55 PM IST
  • 2025ஆம் ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்குமா?
  • அதை காட்டும் ஜன1., ஆம் தேதி அறிகுறிகள்..
  • என்னென்ன தெரியுமா?
ஜன.,1 ‘இந்த’ விஷயங்களை பாத்தீங்களா? அப்போ 2025 லக்கியான வருடம்தான்! title=

Lucky Signs On January 1st 2025 : புத்தாண்டை கொண்டாடி களைத்து போய் விட்டீர்களா? பலரும் 2024-ஆம் ஆண்டு தங்களுக்கு மிக கடுமையான ஆண்டாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்தனர். இதனாலேயே, 2025ஆம் ஆண்டு தங்களிடம் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிலர் பிரார்த்தித்து கொண்டனர். இந்த ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை சில அறிகுறிகள் காண்பிக்கும். இவற்றை, ஜனவரி 1ஆம் தேதி நீங்கள் பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக இந்த வருடம் நன்றாக இருக்கும். அவை என்னென்ன தெரியுமா? 

இயற்கையும் மிருகங்களும்: 

வானவில்:

இது, புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை கொடுக்கும் அறிகுறியாகும். இதனை நீங்கள் வருடத்தின் முதல் நாளில் பார்த்திருந்தீர்கள் என்றால், உங்களுக்கு இந்த வருடம் புது விஷயங்கள் தொடங்கலாம். 

ஜோடிப்பறவைகள்: 

ஜோடியாக பறவைகள் பறப்பதை பார்த்துள்ளீர்கள் என்றால், உங்கள் வாழ்வில் காதல் எட்டிப்பார்க்கப்போகிறது என்று அர்த்தம். அது பிறரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கப்போகும் நட்பாகவும்-அன்பாகவும் கூட இருக்கலாம். 

பட்டாம்பூச்சிகள்:

பட்டாம்பூச்சிகள் ஒன்றின் முடிவையும், அழகான தொடக்கத்தையும் குறிப்பவை. இவற்றை நீங்கள் வருடத்தின் முதல் தேதியில் பார்த்தீர்கள் என்றால் அது உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் காண்பிக்கிறது என அர்த்தம்.

மான்: இது, அமைதியையும், அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் விலங்காகும். இந்த விலங்கை நீங்கள் வருடத்தின் முதல் நாளில் பார்த்துள்ளீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் மனதிலும் வாழ்விலும் அமைதி நிலவும்.

சிரிக்கும் குழந்தை: 

குழந்தைகள் மகிழ்ச்சியையும் புதுமையையும் குறிப்பவர்களாக உள்ளனர். இந்த வருடத்தின் முதல் தேதியில் ஏதோ ஒரு குழந்தை உங்களை பார்த்து சிரித்தது என்றால், உங்களுக்கு அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்துள்ளது என அர்த்தம். 

Lucky Day

பொருட்கள்: 

சாலையில் பணம் அல்லது நாணயம் இருப்பது: நீங்கள் ஜனவரி முதல் தேதி எங்காவது சென்று கொண்டிருக்கும் போது வழியில் நாணயம் அல்லது ரூபாய் நோட்டு கிடைத்தால், உங்களுக்கு இந்த வருடம் தன விருத்தி நிறைந்த வருடம் என அர்த்தமாம். 

பூக்கள்: வருடத்தின் முதல் நாளில் பூக்கள் பூத்திருப்பதை பார்க்கிறீர்கள் என்றால், உங்களுக்கு அழகும் வளர்ச்சியும் இந்த ஆண்டில் கூடப்போகிறது என அர்த்தமாம். 

அதிர்ஷ்ட எண்: 

ஒரு சிலர், 8 என்ற எண் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையதாக இருப்பதாக நம்புகின்றனர். ஜனவரி முதல் தேதியில் இந்த 8ஆம் எண்ணை அடிக்கடி பார்த்தால், உங்களுக்கு அந்த வருடம் அதிர்ஷ்ட மழை அடிக்கப்போகிறது என அர்த்தமாம். அப்படியில்லை என்றால், உங்களுக்கு என்றிருக்கும் அதிர்ஷ்ட எண்ணை அந்த நாளில் அடிக்கடி பார்த்தீர்கள் என்றால் அதுவும் உங்களுக்கு நிகழ இருக்கும் அதிர்ஷத்தை குறிக்கலாம். 

கருணை செயல்: 

மனிதர்கள் எப்போதும் ஒருவருடன் ஒருவர் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பலர் அப்படி இருப்பதில்லை. ஆனால், ஜனவரி முதல் தேதியில் உங்கள் எதிரில் உள்ள யாரோ ஒருவர் பிறரிடம் அல்லது உங்களிடமே கருணையுடன் நடந்து கொள்கிறார் என்றால் உங்களுக்கு அந்த வருடம் நன்றாக இருக்கப்போகிறது என அர்த்தம். 

உங்களுக்கு பிடித்ததை எதார்த்தமாக பார்ப்பது: 

உங்களுக்கு பிடித்த நிறம், பூ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை வருடத்தின் முதல் நாளில் பார்க்கிறீர்கள் என்றால் அந்த நாள் போல அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் நடைபெறும் என அர்த்தம்.

மேலும் படிக்க | காலையில் ‘இந்த’ விஷயங்களை 5 நிமிடம் செய்தால்..தொட்டதெல்லாம் வெற்றிதான்!

மேலும் படிக்க | கர்ப்பமாக இருப்பதுபோல் கனவு வந்தால் என்ன அர்த்தம்? நல்ல விஷயமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News