PM Kisan ஏழாவது தவணை இன்னும் கிடைக்கவில்லையா? இந்த வழியில் சரிபார்க்கவும்

நீங்கள் PMKSN திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவராக இருந்து, பணம் இன்னும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், இதைப் பற்றிய விவரங்களை நீங்கள், விவசாயிகளுக்கான PM கிசான் போர்ட்டல்- pmkisan.gov.in இல் சரிபார்க்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 12:40 PM IST
  • பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா பற்றிய சமீபத்திய செய்தி.
  • PMKSN-க்கான ஏழாவது தவணையை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
  • இது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய மத்திய திட்டமாகும்.
PM Kisan ஏழாவது தவணை இன்னும் கிடைக்கவில்லையா? இந்த வழியில் சரிபார்க்கவும் title=

பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா சமீபத்திய செய்தி: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் ஏழாவது தவணையை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவராக இருந்து, பணம் இன்னும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், இதைப் பற்றிய விவரங்களை நீங்கள், விவசாயிகளுக்கான PM கிசான் போர்ட்டல்- pmkisan.gov.in இல் சரிபார்க்கலாம்.

'FTO (நிதி பரிமாற்ற ஆணை) உருவாக்கப்பட்டுள்ளது, கட்டண உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது' என்ற நிலையை நீங்கள் கண்டால், பயனாளி வழங்கிய அனைத்து தகவல்களையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் பணப் பரிமாற்றத்திற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் அது பயனரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் பொருள்படும்.

இது தவிர, சில பயனாளிகள் தங்கள் நிலையை சரிபார்க்கும்போது 'மாநில அரசால் (State Government) கையொப்பமிடப்பட்ட Rft' செய்தியையும் பெறுகிறார்கள். RFT (Request For Transfer) என்பது பரிமாற்றத்திற்கான வேண்டுகோளைக் குறிக்கிறது. அதாவது, பயனாளியின் தரவு சரிபார்க்கப்பட்டது, அடுத்த கட்ட செயலாக்கத்திற்காக கோரிக்கை மாற்றப்பட்டுள்ளது என்று பொருள்.

இதை சரிபார்ப்பதற்கான முழு முறையையும் இங்கு காணலாம்:

Step 1- அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளமான https://pmkisan.gov.in/ -ஐப் பார்வையிடவும்.

Step 2- முகப்புப்பக்கத்தில் வலது புறத்தில் ‘Farmers Corner’-க்குச் செல்லவும். Step 3- ‘பயனாளி நிலையைக்’ கிளிக் செய்யவும்.

Step 4- உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்

Step 5- பின்னர் ‘Get Data’-வை கிளிக் செய்யவும்.

Step 6- உங்கள் நிலை திரையில் காண்பிக்கப்படும்

ALSO READ: PF Account வைத்திருப்பவர்களுக்கு New Year Gift: அதிகமாகப் போகிறது உங்கள் account balance

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் (PMKSMY) மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய மத்திய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் அல்லது அதற்கான உரிமையைக் கொண்டிருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வருமான உதவி வழங்கப்படுகிறது.

திட்ட வழிகாட்டுதல்களின்படி இந்த நிதி உதவிக்கு தகுதியுள்ள உழவர் குடும்பங்களை மாநில அரசும் யூனியன் பிரதேசங்களும் (Union Territories) அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதியை பரிமாற்றும்.

ALSO READ: ஜனவரி 1 முதல் காசோலை பணபரிவர்தனை முறையில் மாற்றம் - இதோ முழு விவரம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News